கேரளாவில் கடவுளை தரிசிக்க ஆலயங்களுக்கு செல்லும்போது ஆண்கள் சட்டை அணியாமல் வெறும் மேனியுடன் செல்வதை பார்க்கலாம். அட கேரளா என்னங்க இங்க இருக்க நம்ம திருச்செந்தூர் முருகன் கோவிலில் கூட நிறைய பேர் சட்டை அணியாமல் சென்றுதான் கடவுளை தரிசிக்கிறார்கள். அதுவும் குறிப்பாக பிராமண சமுதாயத்தை சேர்ந்த ஆண்கள் எப்போதும் மேலாடை அணியாமல் தான் கடவுளை தரிசனம் செய்வார்கள்.
கோவிலில் விபூதி கொடுக்கும் ஐயர் என்றாவது சட்டை அணிந்து பார்த்து இருக்கீங்களா? எப்பவுமே சட்டை அணியாமல் கோவிலுக்குள் நடமாடுவார்கள். இதற்கு என்ன காரணம் தெரியுமா? அறிவியல் ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் கோவிலுக்குள் ஒரு நேர்மறையான சக்தி ஒன்று இருக்கும். சட்டை அணியாமல் வெறும் மேனியுடன் கோவிலுக்குள் நுழைவதால் அந்த நேர்மறையான சக்தி நமக்கு கிடைத்து கடவுளின் மகிமையை பெறலாம். நம் மனமும் எத்தனை சிந்தனைகளுடன் உள்ளே சென்றாலும் சாந்தி அடையும்.
அதேபோல கோவிலுக்குள் செருப்பு அணியாமல் சென்றால் சாமி குத்தம் ஆகிவிடும் என்று சொல்வதெல்லாம் வெறும் பொய்யான தகவல். நாம் செருப்பை வெளியில் கழட்டி விட்டு கோவிலுக்குள் சென்றவுடன் அந்த நேர்மறையான சக்தியை பெறுவதற்கு வெறும் கால் உதவுகிறது என்று ஆன்மீகவாதிகள் சொல்கிறார்கள்.