நமக்கு அப்பா, அம்மா எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு நம்மை படிப்பில் பெரிய மனிதர்களாக மாற்றும் ஆசிரியர்களும் முக்கியம் தான். ஆனால் சில ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுடன் எப்போதும் க*ண்டிப்புடன் நடந்துகொள்வார்கள். நன்றாக படிக்கும் மாணவர்களிடமே சில ஆசிரியர்கள் கோ*வத்தை வெளிப்படுத்துவார்கள். படிக்காத பையனிடம் மு*றைப்புடன் நடந்துகொண்டால் அதில் ஒரு லாஜிக் இருக்கு. ஏன் நன்றாக படிக்கும் மாணவர்களிடம் கூட சில ஆசிரியர்கள் முகம் கொடுத்து பேசுவதில்லை?
நான் கல்லூரி படிக்கும்போது நன்றாக படிக்கும் மாணவன். எங்க கல்லூரியில் இருக்கும் எல்லா ஆசிரியர்களும் என்னுடன் நன்றாக பேசுவார்கள். ஆனால் எங்க இங்கிலிஷ் டீச்சர் மட்டும் சரியாவே பேசமாட்டாங்க. எப்போவுமே மூஞ்சியை தூக்கி வச்சுக்கிட்டே இருப்பாங்க. அவங்க பாடத்தில் நல்ல மதிப்பெண் எடுத்தால் கூட பாராட்ட மாட்டார்கள்.
கல்லூரி காலம் முடிந்த பிறகு ஒரு முறை எதேச்சையாக அந்த மேடம்மை பார்க்க நேரிட்டது. அப்போது அவர்களிடம் மேடம் என்னை நியாபகம் இருக்கா? நான் உங்கள் மாணவன் என அறிமுகம் செய்தபோது அந்த மேடம் என்னிடம் நன்றாக பேசினார்கள். இவங்களா நம்ம காலேஜ் படிக்கும்போது கோ*வமாக மூஞ்சியை வைத்துக்கொண்டு சுற்றிய ஆசிரியை என்று என்னால் நம்ப முடியவில்லை. என்ன மேடம் இப்போ நல்லா பேசுறீங்க, காலேஜ் படிக்கும்போது யாரிடமும் பேச மாட்டிங்களே ஏன் என்று கேட்டேன்.
என்னுடைய உண்மையான கு*ணமே இதுதான். காலேஜ் படிக்கும் மாணவர்களிடம் நன்றாக பேசினால் பசங்க படிப்பில் கவனம் செலுத்த மாட்டார்கள். என் சம்மந்தமான வகுப்புகளை சரியாக க*வனம் செலுத்தமாட்டார்கள். மேடம் நம்ம தோஸ்து தான் என்று நினைத்துக்கொண்டு படிக்க மாட்டார்கள். அவங்க நல்லா இருக்கணும், நல்லா படிக்கணும் என்று தான் அனைவரிடமும் கண்டிப்பாக நடந்துகொண்டேன். மற்றபடி வேறெந்த காரணமும் இல்லை என்று சொன்னார். அப்போதான் தெரிஞ்சுது ஒவ்வொரு க*ண்டிப்பான ஆசிரியரின் பின்னரும் இப்படிப்பட்ட ஒரு நல்ல மனசு இருக்கு என்று. ஒரு மாணவன் வாழ்க்கையில் முன்னேறுவதில் பொ*றாமைப்படாத நபர்கள் அவங்க பெற்றோரும், மாணவரின் படிப்பில் பெரும் பங்காற்றிய ஆசிரியர்களும் தான்.