notification 20
Misc
நம்ம தமிழ் நாட்டில் மட்டுமே திருமணத்தின் போது நடக்கும் சில வித்யாசமான பழக்கங்கள்!

திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். ஒரு மனிதன் தன்னுடைய வாழ்க்கையில் திருமணம் செய்தால் தான் அவன் பிறந்ததற்கான பலனை அடைய முடியும். அந்த அளவிற்கு திருமணம் எல்லோரின் வாழ்க்கையிலும் முக்கியமான ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது. ஆனால் அந்த திருமணம் எல்லோருக்கும் எளிதில் அமைந்துவிடாது.

நேரம், காலம் எல்லாம் கை கூடி வந்தால் மட்டுமே திருமணவரம் அமையும். நம் தமிழ்நாட்டில் திருமணத்தின் போது சில சம்பிரதாயங்கள் செய்யப்படுகின்றன. சில வித்யாசமான சம்பிரதாயங்களும் நம் நாட்டில் நடைமுறையில் உள்ளன. அந்த சம்பிரதாயங்கள் என்ன என்று இங்கே பார்க்கலாம். பொதுவாக திருமணம் முடிந்த பிறகு மணமகனின் வீட்டில் தான் எப்போதும் முதலிரவு நடக்கும். இதுதான் தமிழ்நாட்டில் வழக்கத்தில் இருக்கும் நடைமுறை.

ஆனால் சில இடங்களில் மட்டும் திருமணம் முடிந்த பிறகு மணப்பெண்ணின் வீட்டில் முதலிரவு நிகழ்வை நடத்துகிறார்கள். திருமண விழா என்றாலே அந்த திருமணத்தின்போது சைவ உணவுகள் தான் திருமண விழாவின்போது சமைப்பார்கள். ஆனால் தமிழ் நாட்டில் உள்ள சில சமூக மக்கள் திருமண நிகழ்வின்போது கறி சாப்பிடாமல் இருக்க மாட்டார்கள். கறி இல்லாம எப்படி கல்யாணம் என்று கேட்பார்களாம். திருமணம் நடக்கும்போது சில சமூகத்தில் மட்டும் மணமகனின் தங்கை மணமகன் தாலி கட்டும் நேரத்தில் கையில் விளக்கை பிடித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்கிற பழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

Share This Story

Written by

Karthick View All Posts