notification 20
Misc
#Dog: கல்லை கண்டால் நாயைக் காணோமா? நாய் படாதபாடு படுத்தப்பட்ட தமிழ் பழமொழி! உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா?

ஒருமுறை கொல்லிமலை டிரிப் போலாம் என்று பிளான் போட்டு, தனி தனி பைக் எல்லாம் ரெடி பண்ணியாச்சு. ரொம்ப நாளுக்கு பிறகு பள்ளிபருவ நண்பர்கள் எல்லாம் இணைந்து எடுத்த முடிவு என்பதால், எல்லோருக்குமே ஆர்வமும், எதிர்பார்ப்பும் அதிகமாகவே இருந்தது. ஒரு வாரத்துக்கு முன்பே, வாட்ஸ்ஆப் குரூப் எல்லாம் கிரியேட் பண்ணி, எப்படி போலாம்? எங்க தங்கலாம்? எந்தெந்த இடங்களுக்கு செல்லலாம்? என்கிற மாதிரியான பேச்சு, விறுவிறுப்பாக நடந்தது. 

எல்லோரும் ஆசை ஆசையாக கிளம்பலாம் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில், பைக் ஆயில் மாற்றாமல் ஓட்டி இஞ்சின் சீஸ் ஆனது. மச்சி வேற பைக் ரெடி பண்ண முடியல, என்னால வர முடியாதுடா என்று நான் சொல்ல, என் ஒருவனுக்காக மொத்த டிரிப்பும் கேன்சல் ஆனது. அதற்கு பிறகு என்னை பார்க்கும் போதெல்லாம், என்னுடைய நண்பன், " அந்த நாயை கண்டா கல்லை காணோம், கல்லை கண்டால் நாயைக்காணோம்" என்ற பழமொழியை சொல்லிக்கொண்டிருந்தான்.

ஏற்கனவே வெறியில் இருக்கான். பதிலுக்கு நானும், "மச்சி நீ சொன்ன பழமொழி தப்புடா, நான் விளக்கம் சொல்றேன்" என புராணம் பாட ஆரம்பித்தேன். பைரவர் கோவிலில், நாய் சிலை தெய்வமாக வணங்கப்படும். கல்லில் இருந்து நாயாக உருபெறும் சிற்பம் அங்கு வைக்கப்பட்டிருக்கும். கலை உணர்வோடு சிற்பத்தை பார்த்தால், அது நாயாக தெரியும். கல்லாக பார்த்தால் நாயாக தெரியாது. இதனைத்தான், "கல்லை கண்டால் நாயை காணோம் நாயை கண்டால் கல்லை காணோம்" என்று சொல்லி நம்மை குழப்பிவிட்டாங்க.

சோ! எல்லாமே நாம் பார்க்கிற விதத்தில் தான் இருக்கு. ஒரு செயலை நாம் எப்படி அணுகுறோம் என்பதில் தான் விஷயம் அடங்கியிருக்கு என்று நண்பனின் சொல்ல, பையன் இன்னும் காண்டாயிட்டான். பிரண்ட்ஷிப்ல இதெல்லாம் சாதாரணம் மச்சா! அடுத்து கோவா டிரிப் போலாம் என்று சொல்லி ஆசை காட்டி, டீ கடைக்கு அழைத்துச்சென்றேன். இதெல்லாம் நடந்து இரண்டு வருடம் ஆயிருக்கும், சொன்ன வார்த்தைகள் மட்டும் நினைவில் இருக்கு, கோவா மட்டும் கனவில் இருக்கு. புஹா! ஹா! ஹா! 

 

Share This Story

Written by

முருகானந்தம் View All Posts