காமெடி நடிகர் சார்லி காமெடி கேரக்ட்டர்களிலும் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குணசித்திர வேடங்களிலும் நடித்து பிரபலமானவர். தற்போது இவருக்கு தமிழ் திரையுலகம் சார்பில் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது. அப்படி என்ன செய்தார்? சார்லி அவர்கள் ஷூட்டிங் முடிந்து மீதமுள்ள தனது நேரத்தை வெட்டியாக செலவிடாமல் அந்த நேரத்தில் "தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை" என்ற பெயரில் ஆய்வை செய்துவந்துள்ளார். இந்த ஆய்விற்காக இவருக்கு தற்போது முனைவர் பட்டம் வழங்கியுள்ளது தமிழக அரசு.
சமீபத்தில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் தமிழக ஆளுநர் தலைமையில் முனைவர் பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.,அதில் நடிகர் சார்லிக்கு அவர் மேற்கொண்ட ஆய்விற்காக முனைவர் பட்டம் வழங்கி கவுரப்படுத்தியுள்ளது தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம்.
இவருக்கு தற்போது தமிழ் திரையுலக பிரபலங்கள் பலர் வாழ்த்து கூறிவருகின்றனர். பெரும்பாலாக இவர் நடித்த குணசித்திர வேடங்களில், இவரது முகபாவனை குறிப்பாக விஜய் நடித்திருந்த 'ப்ரண்ட்ஸ்' படத்தில் இவரது நடிப்பு தூக்கலாக இருக்கும். இதில் வடிவேலு தான் முக்கிய நகைச்சுவை நாயகராக இருந்தாலும் சார்லி அவர்களின் காமெடியை நீக்கி விட்டு பார்த்தால் வெறுமையாக இருக்கும். டையலாக்கிற்கு சரியான டைமிங் மட்டும் போதாது, முகபாவனையும் முக்கியம் என உணர்த்தும் வகையில் இருக்கும் சார்லியின் நகைச்சுவை.. புத்திசோதனை இல்லாத கதாபாத்திரமாக நடித்திருப்பார் சார்லி.வடிவேலுவின் கேள்விகளுக்கு சார்லியின் வேடிக்கையான பதில்கள் சரியான காம்பினேஷன். புதுமுக நடிகர்களின் வருகையால் சரியான வாய்ப்புகள் இன்றி நாளடைவில் ஹீரோ ஹீரோயின்களின் தந்தையாக, குணசித்திர வேடங்களில் நுழைந்துவிட்டார், வழங்கப்பட்ட கதாபாத்திரத்தில் எந்த குறையும் இன்றி பார்ப்பவர்களை கவர்ந்துவிடுவார்.சரியான அங்கீகாரம் இல்லாமல் இவர் போன்ற பல குணசித்திர நடிகர்கள் தமிழ் திரையுலகில் காணாமல் போய்விடுகின்றனர். தமிழக அரசு இவரது ஆராய்ச்சியை அங்கீகரித்து முனைவர் பட்டம் கொடுத்தது வரவேற்கத்தக்கது..