Daily News

கழுத்தை நெறிக்கும் விதிகளை ஏற்றுக்கொள்ள முடியாது! உணவு டெலிவரியை நிறுத்திய ஊழியர்கள்! என்ன செய்யப்போகிறது ஸ்விக்கி?

Sep 20 2022 07:41:00 AM

சென்னையில் ஸ்விக்கி நிறுவன ஊழியர்கள் திடீரெனெ வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்விக்கி நிறுவனம் சமீபத்தில் அமல்படுத்திய விதிமுறைகள் தங்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் இருப்பதாக உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் கூறுகின்றனர்.

swiggy employees strike Chennai

ஸ்விக்கி, சோமாட்டோ போன்ற உணவு டெலிவரி நிறுவனங்களில் ஆயிரக்கணக்கானவர்கள் பகுதி நேரம் மற்றும் முழுநேர தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். சென்னை போன்ற பெருநகரங்களில் உணவு டெலிவரி அதிகம் இருக்கும் என்பதால் படித்த இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் என பலரும் இந்த தொழில் மூலம் காசு சம்பாரித்து வருகின்றனர்.

swiggy employees strike Chennai

ஸ்விக்கி நிறுவனம் தனது விதிமுறைகளை மாற்றியமைத்துள்ளது தான் இந்த போராட்டத்துக்கு காரணமாக உள்ளது. வாரந்தோறும் வழங்கப்பட்டு வந்த ஊக்கத்தொகை இனிமேல் கிடையாது, தினமும் 16 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் போன்ற கடுமையான விதிகளும் இதில் அடங்கும். வேலைப்பளுவை அதிகரித்தது மட்டுமின்றி ஊதியத்தையும் குறைத்து அட்டவணை ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த நிறுவனம். அதன்படி ஒரு டெலிவரி பாய் எவ்வளவு நேரம் வேலை பார்த்தாலும் குறிப்பிட்ட சம்பளம் மட்டுமே கிடைக்கிறது.

swiggy employees strike Chennai

சராசரியாக வாரம் 15000 வரை சம்பளம் கிடைத்துவந்த நிலையில் தற்போது அந்த தொகை 12000 ரூபாயாக குறைந்துள்ளது என ஒருவர் தெரிவித்தார். பெட்ரோல், உணவு மற்றும் இதர செலவுகள் போக கையில் 6 அல்லது 7000 மட்டுமே கிடைப்பதால் தங்களால் குடும்ப செலவுகளை சமாளிக்க முடியவில்லை என்று மற்றொருவர் புலம்புகிறார். ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று விதிகளில் திருத்தம் செய்யும் முடிவை ஸ்விக்கி நிறுவனம் எடுத்தால் நல்லது. இல்லையெனில் சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் ஸ்விக்கியின் உணவு சேவை வெகுவாக பாதிக்கப்படும்.