notification 20
Daily News
கேஸ் அடுப்பும் வேண்டாம்! இண்டக்ஷன் அடுப்பும் வேண்டாம்! 12000 ரூபாய் செலவழித்து லைஃப்டைம் செட்டில்மென்ட்டை வாங்குங்க மக்களே! மார்க்கெட்டுக்கு புதுசா ஒன்னு வந்திருக்கு!

சிலிண்டர் விலை 1000 ரூபாயை கடந்து சென்று கொண்டிருக்கிறது. சிலிண்டருக்கான மானியமும் இப்போது சரிவர கிடைப்பதில்லை. 5 பேர் கொண்ட குடும்பத்துக்கு மாதம் ஒரு சிலிண்டர் போதவில்லை. இப்படி பல்வேறு பிரச்சனைகள் காரணமாக குடும்ப தலைவிகள் பலரும் கேஸ் அடுப்புக்கு பதிலாக மின்சாரம் மூலம் இயங்கும் இண்டக்ஷன் அடுப்புகளை வாங்கி பயன்படுத்த துவங்கினர். ஆனால் விதி யாரை விட்டது?

surya nutan solar stove Indian oil

மின்சார கட்டணங்களும் உயர்த்தப்பட்டு விட்டதால் இண்டக்ஷன் அடுப்புக்கும் சிலிண்டரை விட அதிகம் காசு செலவழிக்க வேண்டியுள்ளது. இப்படியே போனால் என்னதான் செய்வது என புலம்பித்தவிக்கும் தாய்மார்களுக்காகவே விரைவில் மார்க்கெட்டுக்கு வரவுள்ளது ஒரு புதிய சோலார் அடுப்பு. நீங்கள் நினைப்பது போல இது ஒன்றும் சாதாரண சோலார் அடுப்பு கிடையாது. இது மிகவும் வித்தியாசமானது மற்றும் பயன்படுத்த எளிதானது.

surya nutan solar stove Indian oil

சோலார் அடுப்பு என்றால் சூரிய வெளிச்சத்தில் மட்டும் தான் இயங்குமா என பயப்பட வேண்டாம். இந்தியன் ஆயில் நிறுவனம் தயாரித்துள்ள இந்த சோலார் அடுப்பு இரண்டு விதமான பகுதிகளை கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியை மட்டும் நீங்கள் வீட்டுக்கு வெளியே சூரிய ஒளி படும் இடத்தில் வைத்தால் போதும். மற்றொரு பகுதியை உங்கள் சமயலறையில் வைத்துக்கொள்ளலாம். Surya Nutan என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சோலார் அடுப்பின் ஆரம்ப விலை 12000 ரூபாய் ஆகும்.

surya nutan solar stove Indian oil

சூரிய ஒளியை சேமித்து வைத்து பயன்படுத்துவதற்காக இந்த அடுப்பில் ஒரு பேட்டரியும் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இரவு நேரத்திலும் நீங்கள் எவ்வித சிரமும் இல்லாமல் சமையல் செய்ய முடியும். விரைவில் இந்த நவீன சோலார் அடுப்பை சந்தைக்கு கொண்டுவர இந்தியன் ஆயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஒருமுறை மட்டும் காசை செலவழித்து இந்த அடுப்பை நீங்க வாங்கிவிட்டால் அதன் பிறகு ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் வாங்க வேண்டிய அவசியம் இருக்காது.

Share This Story

Written by

Gowtham View All Posts