notification 20
Lushgreen
நேற்று முளைத்த காளான் ஹீரோவுக்கு கூட அடைமொழி பெயர் இருக்கு, ஆனால் இதுவரை சூர்யாவிற்கு இல்லையே? நேரடியாக ரஜினி கூட போட்டியா? தலைக்கு தில்லுதான்!

அமேசான் பிரைம் தனது ப்ரஸ் ரிலீஸ் தரப்பில் சூர்யாவை 'சூப்பர் ஸ்டார் சூர்யா நடிக்கும் ஜெய் பீம்' என குறிப்பிட்டள்ளனர். இந்த செய்தி பரவ ஆரம்பித்தது முதல் இணையம் முழுக்க ரியல் சூப்பர் ஸ்டார் சூர்யா, ரீல் சூப்பர் ஸ்டார் ரஜினியா? என்றபடி கூச்சல்கள் எழ ஆரம்பித்துவிட்டது. இந்த அமேசான் பிரைம் சும்மாவே இருக்கமாட்டார்கள் போல. முன்னதாக மாஸ்டர் படம் வெளியான போது, விஜய் சேதுபதியை தமிழ் சூப்பர் ஸ்டார் என கிளப்பிவிட்டு, பின்னர் கம்முனு இருந்து கொண்டார்கள். சும்மா இருக்காமல் என்னவோ செய்ய முயற்சி செய்கிறார்கள் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. 

இதில் இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், சூர்யா நடிக்கும் ஜெய் பீம் படத்தின் தயாரிப்பாளரே சூர்யா தான். அவருடைய அனுமதி இல்லாமலா இந்த பட்டபெயர் வெளியாகி இருக்கும் என சந்தேகிக்கிறது சினிமா வட்டாரம். 

ஆனால் ஒரு விஷயத்தை சிந்தித்தது உண்டா? இப்போது வளர்ந்து வரும் ஹீரோக்கள் கூட தங்களது பெயருக்கு முன்னால் அடைமொழி வைத்துக்கொள்கிறார்கள். அப்படி இருக்க வளர்ந்த ஹீரோவான சூர்யா ஏன் தன்னுடைய பெயருக்கு முன்னால் அடைமொழி வைத்துக்கொள்ளவில்லை என சிந்தித்தது உண்டா?

சூர்யா வளர்ந்து வர ஆரம்பித்த காலத்தில், சூர்யாவின் ரசிகர் மன்றம் ஆர்வக்கோளாறில் சூர்யாவிற்கு புரட்சி புயல் என அடைமொழியை சூட்டியுள்ளனர். ஆனால் அந்த பெயரோ வைகோ அவர்களை குறிக்கும் என்பது யாருக்கும் தெரியவில்லை. பின்னர் வைகோ தரப்பில் இருந்து வந்த அழுத்தத்தின் பெயரில் அந்த பட்டப்பெயரை தூக்கிவிட்டார்களாம். அப்போது இருந்தே அடைமொழியை தவிர்த்த சூர்யா இப்போதா விரும்ப போகிறார்?

Share This Story

Written by

AP View All Posts