சன்னி லியோன் யாருன்னு சொல்ல வேண்டியதில்லை. அப்படி யாருன்னு தெரியாதவங்க இதற்கு மேல் படித்தால் சுவாரஸ்யம் இருக்காது. உலகம் முழுக்க பார்த்து மட்டுமே ரசித்த நடிகைக்கு, ரசிகர் மன்றம் தொடங்கியது நம்ம ஊரில் மட்டும் தான். அப்படிப்பட்டவரை நேரில் பார்த்தால் சும்மா இருப்பாங்களா? நம்ம பசங்க. அதற்கான வாய்ப்பு வந்ததும். சும்மா புகுந்து விளையாடி இருக்காரு நம்ம தம்பி. மனம் துவண்டு போன நேரத்தில் எல்லாம், கை கொடுக்கும் சன்னி லியோனுக்காக தன்னுடைய கையே கொடுத்து இருக்காரு.
திருப்பதி மோகன் பாபு யூனிவெர்சிட்டிக்கு ஒரு விசிட் விட்ருக்காங்க. கட்டுக்கடங்காத கூட்டத்தை தாண்டி, சன்னி லியோனை கண்ட மாணவர் ஒருவர், கையை உயர்த்தி காட்டியுள்ளார். உடனே தம்பி யாருன்னு பாருங்கன்னு சொல்லி, பக்கத்தில் கூப்பிட்டு பேசி இருக்காங்க. பார்த்தாலே பாக்கியம் என்று நினைத்த பையனுக்கு அருகில் வந்ததும் கையும் ஓடல, காலும் ஓடல. உடனே நான் உங்கள் பெயரை கையில் பச்சை குத்தி இருக்கேன்னு காட்டியுள்ளார்.
மகிழ்ச்சியில் மனம் குளிர்ந்த சன்னி லியோன், மாணவருடைய கையை உயர்த்தி, தன்னுடைய நெஞ்சுக்கு நேராக வைத்து, பாருங்க எனக்காக என்னவெல்லாம் பண்ணியிருக்காங்க சொல்லி வீடியோ எடுத்தாங்க. அதனை இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் போட்டிருக்காங்க. இதற்கு வந்த கமெண்ட்ஸ் பார்க்கும் போது தான், கொஞ்சம் பக்கு பக்குன்னு இருக்குது. "ஒரே ஒரு தடவை அந்த தம்பியோட ஆசைய நிறைவேத்தலாம். இது மண்ணு திங்கற உடம்பு தானேன்னு" ஒருத்தர் சொல்லி இருக்காரு.
"கையில மட்டுமா பச்சகுத்தியிருக்கான்னு நல்ல பாருங்க" என்று ஒருத்தர் டபுள் மீனிங்கில் அடிச்சு விட்டிருக்காரு. இன்னொருத்தார், அதற்கும் அல்டிமேட்டா "நானா இருந்தா குத்துற இடமே வேறன்னு" சொல்லி இருக்காரு. போதும் போதும் இதற்கு மேல் போனால் சென்சார் கூட போட முடியாது. அந்த அளவுக்கு பேசி இருக்காங்க. இப்படிப்பட்ட விஷயங்கள் தான் இந்தக்கால பசங்களுக்கு பிடிக்கும் போலிருக்கு. வீடியோ வெளியானதும் ஒரு லட்சம் பேருக்கு மேல் பார்த்து இருக்காங்க.