Daily News

வேறு கட்சிக்கு செல்லும் எண்ணமில்லை! விலகல் முடிவு குறித்து விளக்கம் கொடுத்த சுப்புலட்சுமி ஜெகதீசன்!

Sep 21 2022 08:21:00 AM

திராவிட முன்னேற்ற கழகத்தில் நீண்ட காலமாக துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வந்தார் சுப்புலட்சுமி. கலைஞர் காலத்தில் இருந்தே கட்சியில் நல்ல செல்வாக்குடன் இருக்கும் சுப்புலட்சுமி திடீரென்று கட்சியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு வெளியானது. இந்த செய்தி திமுகவினருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஆளுங்கட்சியின் முக்கிய தலைவர் பதவி விலகியதால் எதிர்க்கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் விதவிதமான விமர்சனங்களை கூறி வருகின்றனர்.

subbulakshmi jegatheesan DMK leader relieved from duty

டெல்லியில் இருந்து தமிழகம் திரும்பிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கட்சியில் இருந்து முக்கிய பிரமுகர்கள் விலகுவது தான் திராவிட மாடலா? இது தான் திமுக அரசின் சாதனையா? என்று விமர்சித்துள்ளார். சுப்புலட்சுமி ஜெகதீசன் கட்சியில் இருந்து விலகியதற்கு காரணம் இது தான் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதையை அவிழ்த்துவிட்டுக்கொண்டு இருக்கின்றனர்.

subbulakshmi jegatheesan DMK leader relieved from duty

கட்சியில் இருந்து விலகுகிறேன் என்று சுப்புலட்சுமி அறிவித்ததில் இருந்து அது தொடர்பாக பல்வேறு கருத்துக்களும், விமர்சனங்களும் வந்து கொண்டிருக்கிறது. அவர் வேறு கட்சிக்கு செல்ல வாய்ப்பிருப்பதாக ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். ஆனால் தான் வேறு எந்த கட்சிக்கும் செல்லப்போவதில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் சுப்புலட்சுமி.

subbulakshmi jegatheesan DMK leader relieved from duty

பெரியார் கொள்கைகளை பின்பற்றும் எனக்கு வேறு கட்சிக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. நான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதற்காகத்தான் திமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்தேன். ஓய்வு தேவையில்லை என்றால் திமுகவை விட்டு விலகியிருக்க மாட்டேன். அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதற்கும், ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்கு தாவுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது. இதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்பது தான் சுப்புலட்சுமி ஜெகதீசன் சொல்ல வரும் கருத்தாகும்.