நடிகர் சிவகார்த்திகேயனுக்கு தனி பேனஸ் பேஸ் இருக்கு. அவரை வைத்து எப்படிப்பட்ட படம் எடுத்தாலும், குழந்தைகளுடன் தியேட்டருக்கு வர பெற்றோர்கள் ரெடியா இருக்காங்க. இந்த நிலையை எட்டுவது அவ்வளவு சாதாரணமான விஷயம் இல்லைங்க. ரொம்பவே மெனக்கெடனும். அதுவும் டீவி ஷோவில் பங்கேற்று வந்த ஒருவர், சினிமாவில் சாதிப்பது எல்லாம் பெரிய லக். அது சிவாக்கு கிடைத்திருக்கு.
இப்போ டான், டாக்டர் மாதிரியான படங்கள் தொடர்ந்து கொடுத்து வந்தால், சீக்கிரம் விஜய், அஜித் லெவலுக்கு போக முடியும் என கோலிவுட் வட்டாரம் எதிர்பார்த்தது. இடையில் பிரின்ஸ் படம் வந்து சொதப்பிவிட்டது. இதற்கு காரணம் சிவா மட்டும் இல்லை. அவரே படம் தயாரிக்க நினைத்து கடனில் சிக்கியதால், வந்த வினையாம். சினிமா கேரியரை முடித்துக்கட்ட இந்த மாதிரி சில சம்பவங்கள் நடக்கும். அதை தாண்டி அவர் முன்னேற வேண்டும் எனகின்றனர் நலம் விரும்பிகள்.
சீமைராஜான்னு ஒரு படம் வந்தது. முதன் முதலில் அதுதான் பெரிய அடியை கொடுத்தது. அதன் பிறகு தோல்வி படங்களால் ஏற்பட்ட கடனை அடைக்க, ஒரு குறிப்பிட்ட தயாரிப்பு நிறுவனத்திற்கு தொடர்ந்து படங்கள் நடித்து கொடுத்தார் சிவா. அந்த படங்களும் தொடர் தோல்வியை சந்தித்து சிவகார்த்திகேயனின் சினிமா அந்தஸ்து பாதாளத்திற்கு சென்றது. இப்போது அந்த லிஸ்ட்டில் பிரின்ஸ் படம். இதனால் கைவசம் வந்த நல்ல படங்களும், கை நழுவி போகிறதாம். பாவம் சிவா. மீண்டும் கம் பேக் கொடுக்கணும்.