notification 20
Lushgreen
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் சினிமா துறையில் வாய்ப்பு கிடைத்தும் கோட்டை விட என்ன காரணம்? சிவகார்த்திகேயன் மாதிரி ஆகி இருக்க வேண்டிய ஆளெல்லாம் இப்போ ஆளே அட்ரஸ் இல்லாமா போய்டாங்களே!

சினிமாவில் வாய்ப்பு கிடைப்பது சாதாரண  விஷயம் கிடையாது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தல அஜித், விஜய் சேதுபதி போன்றோர் எவ்வளவு க ஷ்டப்பட்டு இந்த இடத்திற்கு வந்தார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம். இவர்களைப் போல் நிறைய பேர் இன்னமும் க ஷ்டப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள். தங்கள் முகத்தை சினிமாவில் காண்பிக்க எவ்வளவோ முயற்சி செய்தும் இன்னமும் வெற்றி பெற முடியாமல் நிறைய பேர் த வித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தற்போது சினிமாவில் பேமஸ் ஆக ஒரு ஐடியா அனைவருக்கும் கிடைத்துவிட்டது. விஜய் டிவி போன்ற பிரபலமான சேனல்களில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ், குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மக்களின் மனதை வென்றால் மிக சுலபமாக சினிமா துறைக்குள் நுழைந்துவிடலாம். சிவகார்த்திகேயன், சந்தானம் போன்ற முன்னணி நடிகர்களே விஜய் டிவியில் பேமஸ் ஆகித்தான் சினிமாவிற்குள் நுழைந்தார்கள்.

நிறைய பேர் இந்த நல்ல வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்துகிறீர்களா என்றால் அதற்கு பதில் இல்லை என்று தான் வரும். நடிகை ஓவியா, ஆரவ் போன்றோர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடித்ததன் மூலம் புகழின் உச்சிக்கே சென்றார்கள். அந்த காலகட்டத்தில் அந்த புகழை இவர்கள் சினிமாவில் பயன்படுத்தி இருந்தால் அவர்களின் நிலையே மாறி இருக்கும்.

விஜய்யுடன் நடிப்பதற்கு கூட ஓவியாவுக்கு வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் அவர்கள் அதை சரியாக பயன்படுத்தவில்லை. ஒழுங்கா சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு புது கடை திறப்பு விழா, நகைக் கடை திறப்பு விழாக்களில் கலந்துகொண்டு கல்லா கட்டினார்கள். அப்புறம் எல்லாரும் இவங்கள க ழட்டி விட்ட பின்னர் மீண்டும் சினிமா பக்கம் திரும்பியபோது சினிமா துறையும் இவர்களை ஏ ளனமாக பார்க்கத் தொடங்கியது. காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளவேண்டும் என்பதைப் போல பிக் பாஸ் நிகழ்ச்சியை முடித்த உடனே சினிமாவுக்கு வந்திருந்தால் இவர்களின் நிலையே வேறுமாதிரி ஆகி இருக்கும் என்று திரைத்துறை வட்டாரங்களில் பேசிக்கொள்கிறார்கள்.

Share This Story

Written by

Karthick View All Posts