இந்த உலகில் பிறந்த அனைத்து மக்களின் மிக முக்கிய ஆசை சொந்தமாக வீடு கட்டுவது. குறிப்பாக இன்றைய கால இளைஞர்களின் கனவே சொந்தமாக வீடு கட்டுவது தான். நிறைய பேர் வீடு கட்டினால் தான் திருமணம் செய்வேன் என்று திருமணமே செய்யாமல் வாழ்கிறார்கள். வீடு கட்டுவதற்கு காசு, பணம் எந்த அளவுக்கு முக்கியமோ அதே போன்று நேரம், காலம் இறைவனின் ஆசீர்வாதமும் முக்கியம்.
சென்னைக்கு மிக அருகில் அமைந்த்துள்ள பகுதி சிறுவாபுரி. இங்கே எம்பெருமான் முருகக் கடவுள் பள்ளிகொண்டுள்ளான். சிறுவாபுரியில் உள்ள முருகப்பெருமானை வழிப்பட்டால் வீடு கட்டும் யோகம் விரைவில் நிறைவேறும் என்று அந்த கோவிலின் மகிமை அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.
இந்த சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு சென்று வீடு கட்டும் யோகம் விரைவில் நிறைவேற வேண்டும் என்று கல்லின் மீது கல்லை வைத்து முருகப்பெருமானை வேண்டி வழிபட்டால் போதும். வீடு கட்டும் வேண்டுதல் விரைவில் நிறைவேறும் என்பது ஐதீகம். அதேபோல திருமணம் ஆகாதவர்கள் இந்த கோவிலுக்கு சென்று திருமணம் விரைவில் நடக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டாலும் திருமண யோகம் விரைவில் கைகூடும்.