மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது சிங்கப்பூர் ஒரு மிகச்சிறிய நாடு தான். ஆனால் இங்கு நிறைய பணக்கார மக்கள் வாழ்கிறார்கள். சிங்கப்பூர் ஒரு மிகப்பெரிய பணக்கார நாடு மற்றும் மக்கள் வாழ்வதற்கு ஏற்ற பாதுகாப்பான நாடு என்று பல முறை செய்திகளில் தகவல்கள் வெளிவந்துள்ளது.

Uptin Saiidi என்ற டிக்டாக் பயனர் தற்போது அதை நிரூபிக்கும் வகையில் ஒரு செயல்முறை செய்து நிரூபித்துள்ளார். மிகவும் விலையுயர்ந்த தன்னுடைய மடிக்கணினியை ஸ்டார்பக்ஸ் என்ற ஒரு பேமஸான உணவு விடுதியில் அப்படியே வைத்து விட்டு சென்றுள்ளார்.

ஒரு மணி நேரம் கழித்து வந்து பார்த்தபோது அந்த லேப்டாப் வைத்த இடத்தில் அப்படியே இருந்துள்ளது. இந்த விடியோவை Uptin Saiidi டிக் டாக்கில் வெளியிட்டு எங்க நாடு எவ்வளவு பாதுகாப்பான நாடுன்னு பாருங்க, சுமார் ஒரு மணி நேரம் வரை இந்த விலையுயர்ந்த லாப்டாப்பை யாரும் எடுக்கவில்லை என்றும், கடந்த 250 நாட்களாக பொதுவான குற்றங்கள் என்று சொல்லப்படும் எந்த ஒரு பெரிய குற்றத்தையும் சிங்கப்பூர் நாட்டில் யாரும் செய்யவில்லை என்றும் சிங்கப்பூரை புகழ்ந்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
