notification 20
Lushgreen
மனித நேயம் என்ற ஒன்று அனைவரிடத்திலும் இருக்குமானால் எவ்வளவு பெரிய பிரச்சனையும் எளிதாக சமாளித்து விட முடியும் என்பதற்கு இதை விட சிறந்த எடுத்துக்காட்டு வேறு ஏது?

தமிழர்கள் உலகப்புகழ் பெற்றவர்கள் என்பது நாம் அறிந்ததே. இப்போது மட்டுமல்ல எப்போதுமே தமிழர்களின் புகழை உலகம் பாராட்டிக்கொண்டுதான் இருக்கும். மனித நேயம் மிக்க மாமனிதர்கள் வாழும் வரை தமிழுக்கும் தமிழ் மண்ணுக்கும் அழிவென்பதே கிடையாது. தமிழரின் சிறப்பை மீண்டும் ஒருமுறை உலகறிய செய்துள்ள ஒரு நெகிழ்வான சம்பவத்தை பற்றி கூறுகிறேன் கேளுங்கள்.

Indian national wins hearts for helping visually-impaired man in Singapore  | Hindustan Times

தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் குணசேகரன் மணிகண்டன். இவர் சிங்கப்பூரில் நில ஆய்வு உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் 18ம் தேதி சிங்கப்பூரின் அங் மோ கியோ அவென்யூ என்ற பகுதியில் பார்வையற்ற முதியவர் ஒருவர் சாலையை கடக்க முடியாமல் சிரமப்பட்டு கொண்டிருந்தார். இந்த காட்சியை பார்த்த மணிகண்டன் அந்த முதியவரின் கரம் பிடித்து அவர் சாலையை கடக்க உதவி செய்தார்.

singapore1 - updatenews360

இதுமட்டுமல்லாது அந்த முதியவர் கேட்டுக்கொண்டதால் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று விட்டார். இந்த காட்சியை சிலர் தங்களது போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். வைரலாக பரவிய இந்த வீடியோவை கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் பார்த்துள்ளனர். சிங்கப்பூரில் மனித சக்தி துரையின் கீழ் இயங்கும் ஏஸ் என்ற அமைப்பை சேர்ந்த அதிகாரிகள் இந்த வீடியோவை பார்த்து அதன் பிறகு மணிகண்டனை கண்டுபிடித்து அரசாங்கம் சார்பில் அவரை கௌரவித்து அவருக்கு அன்பளிப்பு வழங்கி பாராட்டுகளை தெரிவித்தனர்.

Singapore - A Country Profile - Nations Online Project

இந்த நெகிழ்ச்சியான சம்பவம் குறித்து பேசிய மணிகண்டன் மாற்றுத்திறனாளிகளிக்கு நம்மால் முடிந்த உதவிகளை எந்த சூழ்நிலையிலும் செய்ய தவறி விடக்கூடாது என்று தனது பெற்றோர் தனக்கு சொல்லிய அறிவுரைகளையே கடைப்பிடித்து வருவதாக தெரிவித்தார். இந்த இளைஞனின் மனித நேயத்தை நாமும் பாராட்டுவதோடு நின்று விடக்கூடாது. நம்மால் முடிந்த உதவிகளை நாமும் அடுத்தவருக்கு செய்ய வேண்டும் என்ற உறுதிமொழியை இப்போதே எடுத்து கொள்ளுங்கள் தோழர்களே.

 

Share This Story

Written by

Gowtham View All Posts