Daily News

ஷூவை வைத்து மன்மத லீலைகள் செய்த டாக்டர்! குட்டைப்பாவாடை அணியும் பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியச்செய்தி!

Sep 22 2022 11:50:00 AM

சிங்கப்பூர் நாட்டில் மருத்துவராக வேலை பார்த்துவரும் ஒருவர் யாரும் எதிர்பார்த்திராத செயல் ஒன்றை செய்து தற்போது ஜெயிலில் களி தின்று கொண்டிருக்கிறார். அண்மையில் இவர் மீது ஒரு பெண் புகார் கொடுத்தார். தன்னுடைய அந்தரங்க வீடியோவை அவர் வைத்துள்ளதாக தெரிவித்த அந்தப்பெண் அவரிடம் இருந்து அந்த வீடியோவை கைப்பற்றி அழிக்கும் படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் மருத்துவரை அழைத்து விசாரித்த போலீசார் அவரை சோதனை செய்தபோது அவரிடம் பல பெண்களின் அந்தரங்க வீடியோக்கள் இருப்பது தெரிய வந்தது. தன்னை யாரும் கண்டிபிடிக்கக்கூடாது என்பதற்காக ஷூவுக்குள் ரகசிய கேமராவை ஒளித்து வைத்து அந்தரங்க வீடியோக்களை பதிவு செய்துள்ளார் அந்த மருத்துவர்.

பெண்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு சென்று அவர்களுக்கே தெரியாமல் அவர்களின் அந்தரங்க வீடியோவை எடுத்து வைப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் அந்த மருத்துவர். ரகசிய கேமராவை சோதித்த போது அதில் 3200க்கும் அதிகமான வீடியோக்கள் இருப்பது தெரிய வந்தது. இவருடைய ரகசியம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அவருடைய மருத்துவர் உரிமம் உடனடியாக ரத்து செய்யப்பட்டு அவரை சிறைக்கு அனுப்பி வைத்தனர் அதிகாரிகள். அவரிடம் விசாரித்ததில் அவர் குட்டைப்பாவாடை அணியும் பெண்களை தேர்ந்தெடுத்து அவர்களை பின்தொடர்ந்து அவர்களின் அந்தரங்க வீடியோக்களை படம் பிடித்துள்ளது தெரிய வந்துள்ளது. குட்டைப்பாவாடை அணியும் பெண்கள் வெளியில் செல்லும் போது எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதற்கு இந்த சம்பவத்தை உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்.