notification 20
Lushgreen
நாங்க போட்டா என்ன போடலைனா உங்களுக்கு என்ன பிரச்சனை ? இதுக்கு இப்படி ஒரு தண்டனை கொடுப்பது நியாயமா ?

மனிதன் தோன்றிய காலத்தில் அவனுக்கு உணவு, உடை போன்ற அத்தியாவசிய தேவைகளை பற்றி அதிக புரிதல் இல்லாமல் இருந்தது. கிடைத்ததை உடுத்திக்கொண்டும், சாப்பிட்டுக்கொண்டும் இருந்தனர். ஆனால் பரிணாம வளர்ச்சியில் பல நூற்றாண்டுகள் முன்னேறி இப்போது 21ம் நூற்றாண்டில் வாழ்ந்து வருகிறோம். இந்த காலத்திலும் சில கற்கால மனிதர்களை காணமுடிகிறது.

Singapore's landed homes to shine again? | JLL

ஆனால் இந்தக்காலத்தில் யாராவது ஆடையின்றி சுற்றி திரிய முடியுமா ? அப்படி சுற்றினால் சும்மா விடுவார்களா ? சிங்கப்பூர் நாட்டை பொறுத்தவரையில் இந்த விஷயத்தில் பயங்கர சட்ட திட்டங்களை வகுத்துள்ளார்கள். இங்கு நிர்வாணமாக சுற்றுவது தடை செய்யப்பட்டுள்ளது. நீங்கள் வீட்டிலேயே இருந்தாலும் நிர்வாணமாக இருக்க கூடாது. அதாவது உங்கள் வீட்டில் உங்களது தனிப்பட்ட அறையில் நீங்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அது பிரச்சனையில்லை. ஆனால் வெளியே தெரியும்படி கதவு அல்லது ஜன்னலை திறந்து வைத்துக்கொண்டு வீட்டில் நிர்வாணமாக இருந்தால் அது சட்டப்படி குற்றமாகும்.

INDIA HOUSE – vedasri siddamsetty

இந்த குற்றத்திற்கு 1500 டாலர்கள் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. இந்திய மதிப்பில் 1,10,000 ரூபாய் அபாரதமாகும். இந்த சட்டம் 1996ம் ஆண்டு முதல் சிங்கப்பூரில் நடைமுறையில் உள்ளது. பல வகையில் சிறப்பு மிக்க சிங்கப்பூரில் இப்படி ஒரு சட்டம் இருக்கிறது என்பது இவ்வளவு நாட்களாக தெரியாமல் போய்விட்டதல்லவா. உங்களுக்கு சந்தேகமாக இருந்தால் உங்கள் நண்பர் யாராவது சிங்கப்பூரில் வசித்தால் கேட்டு பாருங்களேன்.

Share This Story

Written by

Logeshwaran View All Posts