பொதுவாக ஹாலிவுட்டில் வெளியாகும் நிறைய படங்களில் பேங்கில் கொள்ளையடிப்பது, மிகப்பெரிய மால்களில் கொள்ளையடிப்பது, சூதாட்ட கூடங்களில் கொள்ளையடிப்பது போன்ற காட்சிகள் அதிகம் இடம்பெற்றிருப்பதை பார்த்திருப்போம். இதேபோன்ற ஒரு உண்மை சம்பவம் அண்மையில் சிலி நாட்டில் நடந்துள்ளது.

சிலி நாட்டில் உள்ள சாண்டிகோ மாநகரத்தில் செயல்பட்டு வந்த ஒரு சூதாட்டக்கிளப்புக்குள் புகுந்து அங்கிருந்த பணம் அனைத்தையும் மூட்டையில் கட்டிக்கொண்டு அந்த இடத்தை விட்டு கொள்ளையர்கள் தப்பித்தனர். பின்னர் அங்கிருந்த பை பாஸ் சாலை வழியாக திருடர்கள் தப்பிக்க முயன்றுள்ளனர்.

அந்த திருடர்களை எல்லா பக்கமும் இருந்து போலீஸ் சுத்தி வளைத்துவிட்டனர். அந்த திருடர்கள் பயணம் செய்த சாலையில் அதிக வாகனங்கள் வேகமாக வந்துகொண்டிருந்தது. போலீசாரிடம் இருந்து தப்பிக்க அந்த திருடர்கள் திருடி வந்த எல்லா பணத்தையும் சாலையில் தூக்கி வீச ஆரம்பித்தனர்.

சாலையில் சென்று கொண்டிருந்த எல்லா மக்களும் தங்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு சாலையில் பறந்த பணத்தை பொறுக்க ஆரம்பித்தனர். இங்கு நடக்கும் எல்லா சம்பவத்தையும் பார்த்துக்கொண்டிருந்த போலீஸ்காரர்கள் அந்த திருடர்கள் வந்த காரை சுற்றி வளைத்து திருடர்களை கையும், களவுமாக பிடித்தனர்.
