maybemaynot
notification 20
Daily News
Video: வாயை கடிக்கிற மாதிரி முத்தம் கொடுக்கிறான் மேடம்: தெருவில் நடந்து செல்லும் பெண்களை வம்படியாக கிஸ் அடிக்கும் ஆசாமி!

பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் ஒரு ஆசாமி சுற்றி வருகிறான். ரொம்ப விவகாரம் பிடித்த ஆளாம். அங்குள்ள சதார் மருத்துவமனை வளாக சுவர் ஏறி குதித்து ஒருவன் வந்துள்ளான். மருத்துவமனையில் சுகாதாரப் பணியாளராக வேலை பார்க்கும் பெண்ணை நோட்டமிட்டு வந்தான். திடீரென என்ன நினைத்தானோ தெரியவில்லை, அந்த பெண்ணை இறுக அணைத்து வாயோடு வாய் வைத்து முத்தம் கொடுத்தான். 

அங்குள்ள சிசிடிவி கேமராவில் அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாக முத்தமிடப்பட்ட காட்சி பதிவாகியுள்ளது. இவன் இந்த மாதிரி செய்வது இது முதல் முறை கிடையாதாம். ஏற்கனவே தனியாக செல்லும் பெண்கள் பலரிடம் இது போல நடந்திருக்கிறான். அப்போதெல்லாம் ஆதாரமாக எதுவும் சிக்கவில்லை. இப்போது மருத்துவமனை வளாகத்தில் கிஸ் அடிக்க நினைத்து, கேமராவின் கண்களில் சிக்கிக்கொண்டான். 

சம்பவம் குறித்து ஜமுய் போலீசில் அந்த பெண் புகார் அளித்துள்ளார். அந்த நபரை தனக்கு தெரியாது என்றும் அவர் ஏன் தன்னை குறிவைத்தார் என்பது புரியவில்லை என்றும் கூறியுள்ளார்.  தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) அறிக்கையின்படி, இந்தியாவில் 33,000க்கும் மேற்பட்ட கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன. இருப்பினும், சமூக இழிவு, பழிவாங்கும் பயம் காரணமாக இன்னும் பல சம்பவங்கள் பதிவாகவில்லை. 

 

Share This Story

Written by

முருகானந்தம் View All Posts