maybemaynot
notification 20
Lushgreen
டிவி நாடகங்களில் நடிப்பவர்களுக்கு இவ்வளவு சம்பளமா? பேசாம டிவி சீரியலில் நடிக்க போயிடலாம் போலிருக்கே!

சாயங்காலம் ஆனவுடன் எல்லா வீடுகளிலும் கொ*ரோனா அப்டேட் பாக்குறாங்களோ இல்லையோ மறக்காமல் டிவி சீரியல் பார்த்துவிடுவார்கள். 1990களில் இருந்தே மக்கள் அனைவரும் இந்த டிவி நாடகங்கள் பார்ப்பதற்கு அடிமையாகி கிடக்கிறார்கள். ஒரு காலகட்டத்தில் மக்களுக்கு வாழ்க்கை யதார்த்தத்தை எடுத்து சொன்ன இந்த நாடகங்கள் தற்போது க*ள்ளக்கா*தலையும், க*வர்ச்சி விஷயங்களையும் காண்பிக்கிறார்கள்.

இருந்தாலும் மக்கள் இந்த நாடகங்களை பார்ப்பதை நிறுத்துவதாகத் தெரியவில்லை. அந்த அளவுக்கு சீரியல் நம் மொபைல் போன் போல நம்மை அடிமைப்படுத்தி வைத்துள்ளன. இந்த சீரியல்களில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கு எவ்வளவு சம்பளம் கிடைக்கும் தெரியுமா?

சீரியல்களில் நடிக்கும் புதுமுக நடிகர்களுக்கும், சிறு கதாப்பாத்திரகளுக்கும் 2000 ரூபாய் ஒரு ஷிப்டுக்கு வழங்கப்படுமாம். குறைந்த பட்ச சம்பளமே 2000 ரூபாய் தானாம். ஒரு ஷிப்ட் என்பது ஒரு நாள் நடிக்கும் காட்சிகளுக்கு மட்டும். அதேபோல முன்னணியில் உள்ள நடிகர் நடிகைகளுக்கு அவங்க மார்க்கெட் நிலவரத்தைப் பொறுத்து நாள் ஒன்றுக்கு 10000 ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கும் ஆட்களும் இருக்கிறார்கள். பேசாம நம்ம கிட்ட இருக்குற நடிப்புத் திறமையை வச்சுக்கிட்டு சீரியலில் நடிக்க போய்விடலாம் போலிருக்கே என்று நீங்கள் மனதில் நினைப்பது புரிகிறது.

Share This Story

Written by

Karthick View All Posts