கோயில் இல்லா ஊரில் குடி இருக்காதே என்பார்கள். அதற்கான காரணத்தை விவரிக்கிறார் சபி என்ற பெண்மணி. கோயில் தான் அந்த ஊரின் மேப், அதில் எந்த இடத்தில் நீர் ஆதாரம் உள்ளது.? நீர் ஓட்டம் எப்படி.? பள்ளம் மேடு எது.? எங்கே வசிப்பது.? போன்ற தகவல்களும் அந்த இடத்தில் உள்ள பேராற்றல்/தெய்வம் உள்ள இடத்தையும் குறிக்கும் வண்ணம் கட்டி இருப்பார்கள். அந்த கோயிலில் வைக்கப்பட்டுள்ள நந்தி, அந்த இடத்தில் உள்ள தெய்வத்தை காட்டுமாறு முகம் திரும்பி இருக்கும். உதாரணமாக தஞ்சை பெரிய கோயிலில் வடகிழக்கு ஈசனாரை பார்த்தவாறு இருக்கும்.
அங்கே எனக்கு முன்பக்க தலைக்கு மேலாக நீலநிறமும் அதில் கருநீலவண்ணமாக ஒரு பூ போன்று இடம் வலம் வலம் இடமாக சுற்றுவதை கண்டேன் , அதை போன்று ஒளியாகவோ உணர்வாகவோ ஓசையாகவோ அங்கே எவரும் உணரமுடியும். திருநள்ளார் சனிஈசுவரன் கோயிலில் இடையர் சன்னதியில் உள்ள 3 பேரில், அந்த நிற்கும் 2 ஆம் தெய்வம் பற்றி விளக்கம் தான் அந்த திருகோயில்.
ஒருவர் மேற்கு பக்க மலை, ஒருவர் வடக்கு பக்க மலை என்றவாறு இருக்கும். அதில் நந்தி திசை காட்டுவது யார் என்பதை பார்க்கலாம். ஒரு ஒரு சிலைக்கு முன் நிற்கும் போதும் அந்த சிலையில் காட்டப்பட்டுள்ள ஆற்றல் புள்ளி உங்கள் உடலில் இயங்குவதை காணலாம். சிதம்பரம் கோயில் என்னை ஆச்சரிய படுத்திய கோயில், எமனை காலால் உதைக்கும் ஓர் புள்ளி நான் அங்கு கண்டு இருக்கிறேன். திருவாரூர் நான் கண்ட நடு கோயில், அதாவது தெற்கு,வடக்கு என்று பிரிக்கும் கோவில்.
இலிங்கத்திற்கு தெற்கும் வாய், அதாவது நீர் ஓடும் இலிங்கத்தில் இருந்து அதே போல் வடக்கும் வாய் உண்டு. அந்த இலிங்கத்தில், நம் உடலிலும் தெற்கே வெப்பமாகவும் வடக்கே குளிர்ந்து இருப்பதையும், அங்கு உள்ள மூன்றும் மதில்களை சுற்றி வரும்போது உடலில் ஒவ்வொரு உள்உறுப்புகள் உட்பட அதிர்வதை காணலாம். 3 மதில்களை கடந்த வருவதை தான் தேவார பாடல்கள் மும்மதில் எரித்தல் என்று சொல்கிறது. இந்த புள்ளிகளை 8*8 சதுர அடியிலும் உணரலாம். ஒரு இரவுப கல் ஒரே இடத்தில் உட்கார்ந்தும் உணரலாம். இது நமது மரபு மறை செய்தி. மறைகாத்தல் நமது மரபு. ஆனால் உங்களுக்கு மறையை வெளிபடுத்தி விட்டேன். எனக்கு காட்டப்படும் செய்திகளை திருமந்திரம் வழியாக தெரிந்து கொள்கிறேன்,இதை எல்லாம் ஏன் நாங்கள் பார்க்க வேண்டும் என்று நினைக்காதீர்கள், உங்களுக்கு இங்கு நடப்பது எல்லாம் preplanned என்று புரியும்.