ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் க டும் அ திர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள டம்ஜிபுரா கிராமத்தில் தான் இந்த அவலம் அரங்கேறியுள்ளது. அங்கிருக்கும் பள்ளி விடுதியில் தங்கியிருந்த மாணவி ஒருவர் இந்த கொ டுமைக்கு ஆளாகியுள்ளதாக கூறப்படுகிறது.
சம்மந்தப்பட்ட அந்த சிறுமி மற்றொரு மாணவி வைத்திருந்த 400 ரூபாய் பணத்தை தி ருடியதாகவும் அதற்கு த ண்டனை அளிக்கும் விதமாக அவருக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு ஹாஸ்டலை சுற்றி வரும் படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மகளை காண்பதற்காக தந்தை ஹாஸ்டலுக்கு சென்ற போது அவரிடம் தனக்கு நடந்த அ ட்டூழியம் குறித்து வேதனையுடன் கூறியுள்ளார் அந்தச்சிறுமி.
மகளுக்கு நடந்த துயரம் குறித்து கேள்விப்பட்ட தந்தை உடனடியாக அதுகுறித்து பு கார் அளித்துள்ளார். அவர் அளித்த பு கார் தொடர்பாக விசாரித்து வருவதாகவும், சம்மந்தப்பட்ட ஹாஸ்டல் வார்டன் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.