ak62-vishnu-not-happen-reason
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் அஜித். துணிவு படம் அண்மையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி வசூல் வேட்டை ஆடியது. இந்த துணிவு படத்தை தொடர்ந்து அஜித்குமார் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியிருந்தார். பின்னர் விக்னேஷ் சிவன் சொன்ன கதையில் அஜித்துக்கு திருப்தி இல்லாததால் அந்த படத்தில் இருந்து விக்னேஷ் சிவனை கழட்டி விட்டார் அஜித்.

ak62-vishnu-not-happen-reason
தற்போது இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் லைக்கா நிறுவனம் தயாரிக்கும் படத்தில் அஜித் நடிக்க போகிறார். முதலில் விக்னேஷ் படத்தில் இருந்து அஜித் விலகிய பிறகு தன்னுடைய ஆஸ்தான இயக்குனர் விஷ்ணு வரதன் இயக்ககத்தில் தான் நடிக்க அஜித் முடிவெடுத்தார். ஏற்கனவே அஜித் விஷ்ணு வரதன் கூட்டணியில் உருவான பில்லா மற்றும் ஆரம்பம் படங்கள் சூப்பர் ஹிட் அடித்தன.

ak62-vishnu-not-happen-reason
எனவே விஷ்ணுவரதனை தான் தனது அடுத்த படத்தின் இயக்குனராக தேர்ந்தெடுக்க அஜித் முடிவெடுத்திருந்தார். விஜய்யின் மாமாவான சேவியர் பிரிட்டோ கொ*ரோனா பரவல் ஆரம்பித்த காலத்தில் தன்னுடைய மருமகனை வைத்து ஒரு படம் எடுக்க விஷ்ணு வரதனை புக் செய்திருந்தார். கொ*ரோனா காரணமாக அந்த படத்தின் படப்பிடிப்பு தள்ளிக்கொண்டே போனது. தற்போது முழுமூச்சில் விஷ்ணு வரதன் சேவியர் பிரிட்டோவின் மருமகனை வைத்து படம் எடுத்து வருவதால் தான் AK 62 படத்தில் விஷ்ணுவால் அஜித்துடன் இணைய முடியவில்லை.
