சதுரங்க வேட்டை படத்தை பார்க்காத தமிழ் மக்கள் இங்க யாரும் இருக்க மாட்டாங்க. இப்படி எல்லாமா மக்களை ஏமாத்துவாங்க என்று நாம் யோசிக்கும் அளவிற்கு அந்த படத்தின் நாயகன் எல்லாரையும் ஏமாற்றுவார். இதே மாதிரி ஒரு பெண் அப்பார்ட்மெண்ட்டில் குடியிருந்த மக்கள் எல்லாரையும் ஏமாற்றி உள்ளார். அது ஒரு மிகப்பெரிய அபார்ட்மெண்ட்.
அந்த அப்பார்ட்மெண்ட்டில் குடி இருப்பவர்கள் எல்லாம் மிகப்பெரிய கோடீஸ்வரர்கள். அங்கு ஒரு பெண் புதுசா குடி வந்துள்ளார். ஆரம்பம் முதலே தான் ஒரு மிகப்பெரிய கோடீஸ்வரி என்பதை போல அங்கு வாழும் மக்களிடம் காட்டிக்கொண்டுள்ளார். எனக்கு இந்த கட்சியோட தலைவரையும், துணைத்தலைவரையும் நல்லா தெரியும். அவங்களோட பினாமி பணம் பல கோடி ரூபாய் என்கிட்டே தான் இருக்கு என்று சொல்லியுள்ளார்.
உங்க எல்லாருக்கும் எவ்வளவு பணம் வேணும்னாலும் சொல்லுங்க, நான் உங்களுக்கு லோன் வாங்கி தருகிறேன் என்று சொல்லி எல்லாரிடமும் நம்பிக்கையாக பேசி காசு வாங்கியுள்ளார். அவர் சொன்ன ஆசை வார்த்தைகளை நம்பி பல கோடி ரூபாய்க்கு மேல் அவரிடம் நிறைய பேர் பணம் கொடுத்துள்ளனர். நானும் ஒரு தேசிய கட்சியை சேர்ந்தவர் தான் என்றெல்லாம் சொல்லி எல்லோரிடமும் காசு வாங்கியுள்ளார்.
ஆனால் சொன்ன மாதிரி யாருக்கும் லோன் வாங்கி தரவில்லை. கொடுத்த காசை திருப்பி கேட்டதற்கு அதெல்லாம் தரமுடியாது என்று சொல்லிவிட்டார். நண்பரும் அந்த பெண்ணை நம்பி 15 லட்சம் ரூபாய் ஏமாந்துவிட்டார். காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தால் அவருக்கு ஆதரவாக வாதாட ரெண்டு வக்கீல் வேற வந்துட்டாங்க. காவல் நிலையத்திலும் அந்த பெண்ணுக்கு ஆதரவாகவே பேசுகிறார்கள். வழக்கு இப்போது நிலுவையில் உள்ளது. அந்த பெண்ணுக்கு பின்னாடி மிகப்பெரிய அரசியல் பின்புலமும் இருப்பதால் எப்படியும் கொடுத்த காசு திரும்ப கிடைக்காது என்று முக்கால்வாசி பேர் என்ன செய்வதென்று தெரியாமல் முழிச்சுக்கிட்டு இருக்காங்க. இதை எல்லாம் பாக்கும்போது சதுரங்க வேட்டை படமெல்லாம் ரொம்ப சாதாரணம் என்று நினைக்க தோன்றுகிறது.