தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி காமெடி நடிகராக வளம் வந்தவர் சந்தானம். விஜய் டிவியில் இருந்து சினிமாவுக்குள் புகுந்து வெற்றி பெற்றவர்கள் சந்தானமும், சிவகார்த்திகேயனும். ஆனால் சிவகார்த்திகேயன் மட்டும் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தவுடன் ரசிகர்கள் அவரை கொண்டாட ஆரம்பித்தனர்.

அதற்கு போட்டியாக நானும் இனிமேல் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று அடம்பிடித்து ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார் சந்தானம். இவர் ஹீரோவாக நடித்த எந்த படமும் சொல்லிக்கொள்ளும்படி ஓடவில்லை. எனவே தற்போது அஜித்குமார் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் AK 62 படத்தில் காமெடி நடிகராக மீண்டும் நடிக்க கமிட் ஆகியுள்ளார் சந்தானம்.

அதுமட்டுமல்லாமல் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி மெகா பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த அரண்மனை படத்தின் 4வது பாகத்திலும் சந்தானம் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்த அரண்மனை 4 படத்தில் ஹீரோவாக விஜய் சேதுபதியும், சுந்தர்.சி. மற்றும் சந்தானம் போன்றோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளனர்.
