சஹாரா என்றவுடன் நம் நினைவுக்கு வருவது பாலைவனம் தான். உலகின் மிகப்பெரிய வெப்பமான பாலைவனம் இதுதான். அண்டார்டிகா மற்றும் ஆர்டிக் பாலைவனங்களுக்கு பிறகு மிகப்பெரிய மூன்றாவது பாலைவனம் இந்த சஹாரா பாலைவனம் தான்.

இந்த சஹாரா பாலைவனம் 9,200,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவை உள்ளடக்கியது. இந்த நிலப்பரப்பு சீனாவின் நிலப்பகுதி எவ்வளவோ அதே அளவிற்கு சமம். அதுபோல பூமியின் 8 சதவீதம் நிலப்பரப்பை இந்த சஹாரா பாலைவனம் கொண்டுள்ளது.

சராசரியாக இந்த சஹாரா பாலைவனத்தில் 30 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை நிலவும். அதிகபட்சமாக 58 டிகிரி வரை வெப்பநிலை இங்கு நிலவும். சஹாரா பாலைவனத்தில் உள்ள பாதி பகுதிகளில் 1 சென்டி மீட்டருக்கு குறைவாக மட்டுமே மழை பெய்யுமாம். சஹாரா பாலைவனத்தில் இருபதுக்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளன. சஹாராவில் உள்ள இருபது ஏரிகளில் ஒரே ஒரு நன்னீர் ஏரி மட்டுமே உள்ளது. இரவு நேரங்களில் சஹாரா பாலைவனத்தில் மைனஸ் ஆறு டிகிரி வரை கூட குளிர் நிலவுமாம்.
