மொராக்கோ, அல்ஜீரியா, சாட், எகிப்து, லிபியா, மாலி, நைஜர், மேற்கு சஹாரா, சூடான் மற்றும் துனிசியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய சஹாரா பாலைவனம் வட ஆப்பிரிக்காவின் பெரும்பகுதியை உள்ளடக்கிய பாலைவனமாக உள்ளது. 3.6 மில்லியன் சதுர மைல்களில் அமைந்துள்ள சஹாரா பாலைவனம் சீனா அல்லது அமெரிக்கா அளவுக்கு மிகப்பெரிய பரப்பளவை கொண்டுள்ளது.
சஹாராவில் உள்ள குன்றுகள் 180 மீட்டர் உயரத்தை எட்டும். இது தலைசுற்றக்கூடிய உயரங்கள் அல்ல என்றாலும், வழுக்கும் மணலில் ஏறுவது, பகல் வெப்பத்தில், ஒரு உண்மையான உடற்பயிற்சியாக இருக்கலாம். எர்க்ஸ் என அழைக்கப்படும் பாலைவனத்தின் குன்றுகள் ஒவ்வொரு ஆண்டும் பல கெஜங்கள் மாறும்போது இதன் நிலப்பரப்பு தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது.
ஒட்டகங்களுடன் பயணம் செய்யும் பெடோயின் நாடோடிகளுக்கு சஹாரா வாழ்விடமாக உள்ளது. Bedouin என்ற வார்த்தை அரபு பாடாவிலிருந்து பெறப்பட்டது. அதாவது "பாலைவனத்தில் வசிப்பவர்" என்று இதற்கு பொருளாகும். இந்த நாடோடி மக்கள் வட ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் இடப்பெயர்வின் போது பாலைவனத்தை சுற்றி நகர்கின்றனர்.
பருவம் மற்றும் சமூகத்தின் தேவைகளுக்கு ஏற்ப இயற்கை வளங்களுக்கு அருகில் கூடார முகாம்களை உருவாக்குகின்றனர். பெடோயின் நாடோடிகள் மேய்ச்சல் மரபுகளுக்கும், வாய்வழி கவிதைகளின் வளமான வரலாற்றிற்கும் பெயர் பெற்றவர்கள். சஹாரா மலையேற்றத்தின் போது சில நாடோடிகளை நீங்களே சந்திக்க வாய்ப்பு கிடைக்கும்.
செப்டம்பர் 13, 1922 அன்று லிபியாவின் எல் அஸிசியாவில் சஹாராவின் உயர் வெப்பநிலை 136 டிகிரி பாரன்ஹீட்டில் பதிவானது. நீங்கள் கற்பனை செய்வது போல, சஹாரா பாலைவனம் தொல்பொருள் மற்றும் பழங்கால அதிசயங்களால் நிறைந்துள்ளது. 6000 ஆண்டுகள் பழமையான மெகாலிதிக் கல் வட்டங்கள் மற்றும் சஹாரா பாறை ஓவியங்களுடன், தனித்துவமான டைனோசர் புதைபடிவங்கள் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 80 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசரின் புதைபடிவ எச்சங்கள் சஹாராவில் கண்டுபிடிக்கப்பட்டன. மன்சோராசரஸ் ஷாஹினே என்று பெயரிடப்பட்ட டைனோசர் 33 அடி நீளமும் 5.5 டன் எடையும் கொண்டதாக கருதப்படுகிறது.
சஹாரா பாலைவனம் முதன்மையாக பாறை நிலப்பரப்புகளால் ஆனது. உண்மையில், இது வெறும் 30% மணல் மட்டுமே கொண்டுள்ள பாலைவனம் ஆகும், மீதமுள்ள 70% பெரும்பாலும் கற்கள் அல்லது பாறைகள் ஆகும். சஹாரா பாலைவனத்தில் மணல் கடல்கள், கல் பீடபூமிகள், உப்பு அடுக்குகள், வறண்ட பள்ளத்தாக்குகள், மலைகள், ஆறுகள், நீரோடைகள் மற்றும் சோலைகள் உள்ளன.
எமி கோசி எரிமலை சஹாராவில் 3,415 மீட்டர் உயரத்தில் உள்ளது. எமி கூஸி என்பது வடக்கு சாட் திபெஸ்தி மலைகளில் அமைந்துள்ள ஒரு கவச எரிமலை ஆகும். இந்த எரிமலை பல்வேறு குவிமாடங்கள், சிண்டர் கூம்புகள், எரிமலை பாய்ச்சல்கள் மற்றும் அதன் வெளிப்புறப் பக்கங்களில் காணப்படும் மார்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. சூடான நீரூற்றுகள் 37 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நீரைப் பெறுகின்றன.
இந்த பாலைவனம் மனிதர்கள் வாழ்வதற்கு கடினமான சூழலாக இருக்கலாம். ஆனால் பல விலங்குகள் இங்கு வாழ்கின்றன. ஒட்டகங்கள் சஹாராவில் நீங்கள் பார்க்கும் முக்கிய விலங்குகள். இருப்பினும் சஹாராவில் உள்ள மற்ற குறிப்பிடத்தக்க வனவிலங்குகளில் ஃபென்னெக் நரிகள், அடாக்ஸ் மிருகங்கள், டோர்காஸ் கெஸல்ஸ் மற்றும் சஹரன் சீட்டா ஆகியவை அடங்கும்.
சஹாரா பாலைவனத்தில் உள்ள ஒரே நன்னீர் ஏரியான சாட் ஏரியைத் தவிர மீதி அனைத்தும் உப்பு நீர் ஏரிகள் ஆகும். சஹாராவில் 90 க்கும் மேற்பட்ட சோலைகள் உள்ளன. ஆனால் அவை 3.6 மில்லியன் மைல்களுக்கு மேல் பரவி இருப்பதால் தண்ணீரைத் தேட ஒரு நீண்ட நடைபயணம் மேற்கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு 41,000 வருடங்களுக்கும், சஹாராவானது பாலைவனத்திற்கும் சவன்னா புல்வெளிக்கும் இடையில் மாறி மாறி வருகிறது. இது சூரியனைச் சுற்றி சுழலும் போது பூமியின் அச்சில் ஒரு தள்ளாட்டத்தால் ஏற்படுகிறது. இது வட ஆப்பிரிக்க பருவமழையின் இருப்பிடத்தை மாற்றுகிறது. எனவே சஹாராவின் நிலப்பரப்பில் கடுமையான மாற்றத்தை ஏற்படுத்துகிறது.