Daily News

சபரிமலை செல்லும் பக்தர்கள் கவனத்துக்கு! கட்டாயம் இது வேண்டுமாம்! புதிதாக பரவ தொடங்கி இருக்கும் வியாதியால் கேரளா அரசு கெடுபிடி!

Nov 25 2022 03:01:00 AM

இந்த வருடம் கேரளாவுக்கு மிகவும் மோசமானதாகவே அமைந்து இருக்கிறது. காரணம் கொரோனா பரவலை தொடர்ந்து பறவை காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் அங்கு ஆயிரக்கணக்கான கோழிகள் அழிக்கப்பட்டது. அடுத்ததாக சில வாரங்களுக்கு முன்னர் பன்றி காய்ச்சல் பரவியது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்த பன்றிகள் அழிக்கப்பட்டது. இப்போது அடுத்ததாக ஒரு பிரச்சனை கிளம்பி இருக்கிறது

sabarimalai kerala chinnammai

தற்போது பிறந்திருக்கும் கார்த்திகை மாதம் கேரள மாநிலத்தில் இருக்கும் சபரி மலையில் அதிக அளவிலான பக்தர்களை ஈர்க்கும். மண்டல விரதமிருந்து ஐயப்பனை தரிசனம் செய்ய பக்தர்கள் தற்போது சபரிமலைக்கு வருகை தந்துகொண்டு இருக்கிறார்கள். இந்நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவலர்களில் 5 பேருக்கு சின்னம்மை நோய் உறுதிசெய்யப்பட்டுள்ளது

sabarimalai kerala chinnammai

இதனால் அவர்கள் பணியில் இருந்து விடுமுறை அளிக்கப்பட்டு வீடுகளுக்கு  அனுப்பப்பட்டுள்ளனர். மேலும் கண்காணிப்பு பணியி ஈடுபடும் காவலர் குடியிருப்பு பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நோய் பக்தர்களுக்கு பரவாமல் இருக்க அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது