இந்தியாவில் பக்தர்கள் அதிகம் செல்லும் கோவில்களில் சபரிமலையும் ஒன்று. மிகவும் பிரசித்திபெற்ற இந்த கோவிலில் ஐயப்பனை காண மண்டலா நோன்பிருந்து, இருமுடி கட்டி பாக்த்ர்கள் வருகிறார்கள். அதிலும் கார்த்திகை மாதத்தில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது. மகரஜோதி தரிசனம் காண பக்தர்கள் மிகவும் ஆவலாக வரும் காட்சிகளை காண கண்கோடி வேண்டும். இவ்வாறாக புகழ்பெற்ற சபரிமலை கேரளா மாநிலத்தில் அமைந்துள்ளது

இங்கு செல்ல பேருந்து மற்றும் ரயில் பயணங்கள் இருந்துவரும் நிலையில் விமான பயணம் வேண்டி கோரிக்கைகள் நிறைய எழுந்த நிலையில், தற்போது எருமேலியில் விமான நிலையம் அமைக்க மண்பரிசோதனை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது முதலில் 2.7 கி.மீ தூரத்துக்கு விமான ஓடுபாதை அமைக்க திட்டமிடப்பட்டதாகவும், தற்போது அது 3.5 கி.மீ என்ற அளவுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு காரணம் திருவனந்தபுரம் மற்றும் கொச்சி விமான நிலையங்கள் தான். அவருக்கு இணையாக எருமேலியிலும் அமைக்க வேண்டும் என்று அதிகாரி துளசிதாஸ் கடிதம் அனுப்பி இருந்தார். இதனை ஏற்றுக்கொண்டு அதிகாரிகள் டெல்லியில் இருந்து தற்போது எருமேலிக்கு வந்துள்ளாராம். மேலும் 8க்கும் மேற்பட்ட இடங்களில் 10-20 மீட்டர் ஆழம் தோண்டி சோதனைக்காக மண்ணை சேகரிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளார்களாம்