கணவன் மனைவி இருவருக்குள்ளும் மகிழ்ச்சி நிலைக்க வேண்டுமானால் இருவரும் ஒருவரையொருவர் நன்றாக புரிந்துகொண்டு அவர்களது ஆசைகளை நிறைவேற்ற வேண்டும். இந்த வார்த்தை கணவன், மனைவி இருவருக்குமே பொதுவானது தான். ஒரு பெண் தன்னுடைய வீட்டிலிருந்து உங்களை நம்பி, கழுத்தை நீட்டி தாலி கட்டிக்கொண்டு உங்களுடைய வீட்டுக்கு வருகிறாள் என்றால் அவளது மனம் நோகாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது நம்முடைய கடமை என்று ஒவ்வொரு ஆண்மகனும் உணர வேண்டும். உடல் அளவில் ஒன்றிணைவது மட்டும் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையல்ல. மனதளவிலும் கணவன், மனைவி இருவரும் ஒன்றிணைய வேண்டும். ஒரு கணவனாக இருப்பவன் மனைவியிடம் எப்படியெல்லாம் நடந்துகொள்ள வேண்டும் என்று இன்றைய பதிவில் காண்போம்.
1. தேவைப்படும் விஷயங்களில் மனைவிக்கு சுதந்திரம் கொடுத்து அவர்களை புகுந்த வீட்டில் இயல்பாக இருக்க வைக்க வேண்டும்.
2. வீட்டு வேலைகளில் மனைவிக்கு உங்களால் முடிந்த சிறு சிறு உதவிகளை செய்யலாம். இதனால் உங்கள் மனைவிக்கு உங்கள் மீது இருக்கும் அன்பு அதிகரிக்கும்.
3. வாரத்திற்கு ஒருமுறை அல்லது 10 நாட்களுக்கு ஒருமுறையாவது அவர்களுடைய அம்மா வீட்டுக்கு அழைத்துச்செல்லுங்கள்.
4. ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்களில் கோயில், சினிமா, கடற்கரை என்று எங்காவது அழைத்துக்கொண்டு போய் உங்கள் மனைவியிடம் சிறிது நேரம் மனம் விட்டு பேசுங்கள்.
5. குடும்பத்தை எப்படி மகிழ்ச்சியாகவும், பிரச்சனைகள் இன்றியும் கொண்டு செல்வது என்பதை அவர்களோடு கலந்துரையாடுங்கள்.
6. குடும்ப வரவு செலவுகளை கண்காணிக்க சொல்லி அவர்களிடம் குடும்ப பொறுப்பை ஒப்படைத்து அதை அவர்கள் எப்படி நிர்வகிக்கின்றனர் என்பதை பாருங்கள்.
7. எவ்வளவு இக்கட்டான சூழல் வந்தாலும் மனைவியை கை நீட்டி அ டிக்காதீர்கள். பெண்ணை அ டித்து து ன்புறுத்துவது மிகப்பெரிய பா வம் ஆகும்.
8. உங்க வீட்டுல இருந்து பெருசா என்ன சீர் கொண்டு வந்த என்று கூறி அவர்களை கா யப்படுத்த வேண்டாம். மாமனார் வீட்டில் இருந்து வ ரதட்சணை கேட்டு, உங்கள் மனைவிக்கு உங்கள் மீது இருக்கும் மரியாதையை நீங்களே குறைத்துக்கொள்ளாதீர்கள்.
9. உங்களுடைய அலுவலக டெ ன்சன் எல்லாத்தையும் வீட்டுக்கு கொண்டு வந்து உங்க மனைவி மேல காண்பிக்காதீங்க.
10. எல்லாத்தைவிட முக்கியமானது என்னவென்றால் குழந்தை பெற்றுக்கொள்ளும் விஷயம் தான். உங்கள் மனைவியாகவே இருந்தாலும் அவர்களை அந்த விஷயத்துக்காக வ ற்புறுத்தாதீர்கள். உ டல் மற்றும் மனதளவில் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது உ டலுறவு கொள்வது தான் சிறந்தது. என்னை சுற்றியுள்ள சமுதாயத்தில் ஒவ்வொரு ஆண்களும் செய்யும் தவறுகளை பார்த்து பழக்கப்பட்டதால் அவர்கள் எப்படி இருக்க வேண்டும் என சில அறிவுரைகளை வழங்கியுள்ளேன். இதை அறிவுரையாக எடுத்துக்கொள்ளாமல் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை வாழ்வதற்கான நெறிமுறைகளாக எடுத்துக்கொண்டால் எல்லோருக்குமே நல்லது.