notification 20
Rainforest
விளையாட்டை விட இவருக்கு இந்த துறையில் தான் வருமானம் அதிகமாம்! ரோஜர் பெடரர் பற்றி நாம் அறியாத சில உண்மைகள்!

டென்னிஸ் விளையாட்டின் தலைசிறந்த வீரர்களில் முதலிடத்தில் இருப்பவர் ரோஜர் பெடரர். மிகப்பெரிய பணக்கார நாடான சுவிட்சர்லாந்து நாட்டில் பிறந்த இவர் அந்த நாட்டிற்காக நிறைய போட்டிகளில் விளையாடி பல கோப்பைகளையும், பணத்தையும் சம்பாதித்துள்ளார்.

2020 ஆம் ஆண்டு இவருடைய சொத்து மதிப்பு 106 மில்லியன் அமெரிக்கன் டாலர். 2020 ஆம் ஆண்டு வெளியான போர்ப்ஸ் பத்திரிகையில் இவருடைய பெயரும் இடப்பெற்றிருந்தது. இதில் என்ன சாதனை இருக்கு என்று நீங்கள் நினைக்கலாம். இவரின் மொத்த சொத்து மதிப்பு 106 மில்லியன் டாலர்.

அந்த பணத்தில் வெறும் 6 மில்லியன் டாலர் மட்டுமே இவர் டென்னிஸ் போட்டியில் விளையாடி சம்பாதித்த பணம் என்று தெரிவித்துள்ளார். மீதமுள்ள 100 மில்லியன் டாலர் இவருக்கு விளம்பரங்களில் நடித்ததன் மூலமும், நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதன் மூலம் வருமானமாக கிடைத்துள்ளது. யப்பா சாமி என நாம் யோசிக்கும் அளவுக்கு விளையாட்டை விட மிக அதிகமாக இவருடைய இதர வருமானம் இருக்கிறது.

Share This Story

Written by

Karthick View All Posts