kohli-not-giving-respect-for-shami-fourth-test
இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட், ஒரு நாள் மற்றும் T 20 போட்டிகளுக்கான கேப்டனாக இருப்பவர் ரோஹித் ஷர்மா. இவர் ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்து பல முறை கோப்பைகளை மும்பை அணிக்காக வாங்கிக்கொடுத்துள்ளார். நிச்சயம் இந்திய அணிக்கு வரும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக்கோப்பை ஒரு நாள் தொடரில் கோப்பையை பெற்றுத்தருவார் என்று எல்லோரும் நம்புகிறார்கள். அந்த அளவுக்கு ரோஹித் ஷர்மா சிறந்த கேப்டனாக செயல்படுகிறார்.

kohli-not-giving-respect-for-shami-fourth-test
ரோஹித் ஷர்மாவிற்கு முன்னர் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டவர் விராட் கோஹ்லி. இவர் இந்திய அணிக்காக எந்த வித கோப்பைகளை வென்று கொடுக்கவிட்டாலும் விராட் கோஹ்லி ஒருபோதும் தன்னுடைய அணியில் விளையாடும் வீரர்களை விட்டுக்கொடுக்க மாட்டார். கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கோஹ்லி இந்திய அணியின் கேப்டனாக இருந்தபோது முகமத் ஷமியை மதத்தை வைத்து சில ரசிகர்கள் தாக்கி பேசினார்கள்.

kohli-not-giving-respect-for-shami-fourth-test
அதுகுறித்து அப்போது பேட்டி கொடுத்த கோஹ்லி மதத்தை வைத்து ஒருவரை தாக்கி பேசுவது கேவலமான செயல். முதுகெலும்பில்லாத சிலர் தனிப்பட்ட முறையில் சிலரை இப்படி தரம் தாழ்ந்து பேசுவார்கள். மதம் என்பது ஒவ்வொருவருக்கும் உள்ள தனிப்பட்ட நம்பிக்கை என்று முகமத் ஷமிக்கு ஆறுதலாக பேசினார் கோஹ்லி. தற்போது ஆஸ்திரேலியா அணியுடன் நடந்த நான்காவது டெஸ்ட் போட்டியின் போது சில ரசிகர்கள் ஜெய் ஸ்ரீராம் என்று சொல்லி முகமத் ஷமியை நோக்கி கோஷமிட்டனர்.

kohli-not-giving-respect-for-shami-fourth-test
மைதானத்தில் இருந்த அனைவரும் இந்த சம்பவத்தை வேடிக்கை பார்த்தனர். இதுகுறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவிடம் கேள்வி எழுப்பினர் பத்திரிக்கையாளர்கள். எனக்கு எதுவுமே தெரியாது. இப்போதுதான் கேள்விப்படுகிறேன், அங்கு என்ன நடந்தது என்றே எனக்கு தெரியாது என்று மழுப்பி பதிலளித்தார் ரோஹித் ஷர்மா. ரோஹித் ஷர்மா சொன்ன பதிலை கேட்டு சமூக வலைத்தளங்களில் அவரை திட்டி தீர்த்து வருகின்றனர் ரசிகர்கள்.
