notification 20
Lushgreen
இப்படி ஒரு சொகுசுப் பூங்காவை யார்தான் அனுபவிக்கமாட்டேன் என்று கூற முடியும்? இந்த தனி உலகத்துக்கு மட்டும் சென்றுவிட்டால் உங்களை நீங்களே மறந்து விடக்கூடும்!

மனிதன் கஷ்டப்பட்டு பணம் சம்பாரிப்பது எதற்காக என்று யோசித்தால் அதற்கு பலரும் பல விடைகளை கூறுவார்கள். தினமும் 3 வேளை நன்றாக சாப்பிடுவதற்கு என்று தான் பலரும் தங்களது பதிலாக சொல்வார்கள். சாப்பிடுவதற்காக என்பதை மறுக்க முடியாது. ஆனால் அதை எங்கு எப்படி சாப்பிடுகிறோம் என்பது முக்கியமானது. நாம் இங்கு சாப்பிட வேண்டும் அல்லது அங்கு சாப்பிட வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கும். அப்படி பலரும் சொகுசாக சாப்பிட்டு இளைப்பாற நினைக்கும் ஒரு இடம் தான் சிங்கப்பூரில் அமைந்துள்ள செண்டோசா தீவு.

சிங்கப்பூர் ஒரு அற்புதமான நாடு. அங்கு சுற்றிப்பார்க்க பல இடங்கள் இருக்கிறது. இருப்பினும் நீங்கள் உங்கள் விடுமுறையை ஜாலியாக கொண்டாட நினைத்தால் அதற்கு சரியான இடம் இந்த செண்டோசா தீவுதான். இந்த தீவில் ஒரு ஆடம்பரமான ரிசார்ட் உள்ளது. ரிசார்ட்ஸ் வேர்ல்ட் என்றழைக்கப்படும் இந்த கட்டிடம் சுமார் 4.93 பில்லியன் டாலர் செலவில் கட்டப்பட்டுள்ளது.

ஆசியாவில் அமைந்துள்ள மிக முக்கியமான ரிசார்ட்டுகளில் ஒன்றாக இந்த ரிசார்ட் வேர்ல்ட் இருக்கிறது. இங்கு பல்வேறு வசதிகளும், பொழுதுபோக்கு அம்சங்களும் நிறைந்து காணப்படுவதால் மக்கள் இங்கு வருவதை அதிகம் விரும்புகின்றனர். இந்த ரிசார்ட் வளாகத்தில் மொத்தம் 6 தனித்துவமான ஆடம்பர ஹோட்டல்கள் அமைந்துள்ளது. இதில் மொத்தம் 1600 அறைகள் இருப்பதால் மக்கள் பலரும் குடும்பத்துடன் இங்கு வருவது வாடிக்கையாகி விட்டது. இது தவிர மக்களை மகிழ்விப்பதற்காக கேசினோ மற்றும் தீம் பார்க்குகள் போன்றவையும் இந்த ரிசார்ட் வேர்ல்ட்டில் இடம்பெற்றுள்ளது.

 

Share This Story

Written by

Logeshwaran View All Posts