கத்தாரில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடர் விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது. முன்னணி அணிகள் எல்லாம் முதல் போட்டியில் தோல்வியை சந்தித்து வருவது அதிர்ச்சி அளித்தாலும் விளையாட்டில் இதெல்லாம் சகஜம் என்பதால் அதை யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.
கால்பந்து உலகக்கோப்பையில் இதுவரை ஐந்து முறை கோப்பையை வென்றுள்ள பிரேசில் அணி இந்த முறை மீண்டும் கோப்பையை கைப்பற்றும் என அந்நாட்டு ரசிகர்கள் பலரும் எதிர்பார்க்கின்றனர். அணியில் திறமையான வீரர்கள் நிறைய பேர் இருப்பதால் உத்வேகத்துடன் உலகக்கோப்பையை எதிர்கொண்டுள்ளது பிரேசில். தனது முதல் ஆட்டத்தில் செர்பியாவை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தியுள்ளது பிரேசில் அணி. அந்த அணியின் வெற்றிக்கு வித்திட்டவர் ரிசார்லிசன். அவர் அடித்த அற்புதமான கோல் உலகம் முழுவதும் ட்ரெண்டாகி வருகிறது.
This is the goal of d tournament. If we witness something better than this then it will be miracle. Bicycle kick.#whatagoal #FIFAWorldCup #richarlison #BrazilvsSerbia pic.twitter.com/45U3KCJfbM
— @nur@g (@electrricpiya) November 25, 2022
இது போன்ற கோல்களை உலகக்கோப்பை போன்ற முக்கிய போட்டிகளில் யாரும் முயற்சிக்க மாட்டார்கள். மிகவும் ரிஸ்க் வாய்ந்த இந்த டெக்னிக்கை சாதுர்யமாக கையாண்டு கோல் போட்டு அசத்தியுள்ள ரிசார்லிசன் பாராட்டு மழையில் நனைந்து வருகிறார். இவர் இதே போல் இந்த தொடரில் ஜொலித்தால் பிரேசில் அணி கோப்பையை வெல்வது உறுதி.