பெண் பிள்ளைக்கு திருமணம் செய்து வைக்க நினைக்கும் பெற்றோர் ஆயிரம் முறை யோசித்து தான் மாப்பிளையை தேர்வு செய்ய வேண்டும். மாப்பிள்ளை கோடீஸ்வரனாக இருங்க வேண்டும், கார், பங்களா என்று வசதி வாய்ப்புடன் இருக்க வேண்டும் என யோசிக்கும் பெத்தவங்க பையன் ஒழுக்கசீலனாக இருக்கிறானா என்று பார்ப்பதில்லை. வசதி படைத்த இடத்தில் மாப்பிள்ளையை தேடி அதனால் பெண்ணின் வாழ்க்கையை கோட்டைவிட்ட ஏராளமான குடும்பத்தில் எங்கள் உறவினர் குடும்பமும் ஒன்று.
சில மாதங்களுக்கு முன்பு தான் அந்தப்பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்தனர். மாப்பிள்ளை நல்ல வசதியான இடம் தான். பெரிய நிறுவனத்தில் வேலை பார்க்கிறான். மாதம் ஒன்றரை லட்சம் சம்பளம் வாங்குகிறான். கார், பங்களா என்று எல்லாமே இருக்கிறது. ஆனால் அதை நம்பி பொண்ணை கட்டிக்கொடுத்த பெற்றோருக்கு கல்யாணத்துக்கு பிறகு தான் மிகப்பெரிய அ திர்ச்சி காத்திருந்தது.
வசதியான இடம் என்றால் அவர்களின் வாழ்க்கை முறையும் கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருக்கும். பையனுக்கு கு டியில் இருந்து பெண் சகவாசம் வரை எல்லா பழக்கமுமே இருக்கிறது. வாரத்தில் நான்கு நாட்கள் ம து அருந்தும் பையன் வார இறுதி நாட்களில் அ ஜால் கு ஜால் வேலைகளையும் செய்வான். ப ப்புக்கு சென்று பெண்களுடன் ஆ ட்டம் போடுவது முதல் ச கல வித்தைகளையும் செய்துவிட்டு தான் வீட்டுக்கு வருவான்.
இவனுடைய நடத்தை குறித்து கல்யாணத்துக்கு முன்பு பெண் வீட்டாருக்கு தெரியவில்லை. கல்யாணத்துக்கு பிறகு அவன் அடிக்கும் லூட்டியை அவன் மனைவியால் ச கித்துக்கொள்ள முடியவில்லை. தன் பெற்றோரிடம் இதுகுறித்து அந்தப்பெண் தெரிவித்தாள். அவர்களும் மாப்பிள்ளை வீட்டுக்கு வந்து நியாயம் கேட்டனர். ஆனால் அதற்கு அவர்கள் தி மிராக பதிலளித்தனர். வசதியான இடத்தில் இப்படி இருப்பது சகஜமான ஒன்று. இதையெல்லாம் கேட்டு பிரச்சனை பண்ணாதீங்க என்று மாப்பிள்ளை வீட்டில் சொல்லிவிட்டனர்.
வசதி படைத்த மாப்பிள்ளை வேண்டும் என்று ஆசைப்பட்டு என்னுடைய வாழ்க்கையை இப்படி நீங்களே கெ டுத்துட்டிங்க என்று அந்தப்பெண் பெற்றோரிடம் சொல்லி அ ழுது பு லம்பிக்கொண்டிருக்கிறாள். பத்து ரூபாய் சம்பாதித்தாலும் அவன் குணமானவனாக இருந்தால் போதும், குடும்ப வாழ்க்கை தித்திப்பாக இருக்கும் என்று அந்தக்காலத்து பெத்தவங்க எல்லாம் யோசித்து பெண்களுக்கு கல்யாணம் பண்ணி வைத்தனர். இந்தக்காலத்தில் மாப்பிள்ளை எப்படி இருந்தால் என்ன? அவன் கோடீஸ்வரனாக இருந்தால் போதும் என்ற ஆசையில் பெண்ணின் வாழ்க்கையை கெ டுத்துக் கொண்டிருக்கின்றனர் இந்தக்காலத்து பெற்றோர்கள். இதில் மாட்டிக்கொண்டு தவிப்பது என்னமோ அந்தப் பெண் தான். வசதி படைத்த வீட்டில் கல்யாணம் பண்ணுவதற்கு முன்பு அவர்களுடைய பழக்க வழக்கங்கள் குறித்து தெரிந்துகொண்டு பெண்ணை கொடுப்பது தான் உங்கள் பெண்ணின் வாழ்க்கையை காப்பாற்றும் என்பதை அறிந்துகொள்ளுங்கள் பெற்றோர்களே.