பொதுவாக நாம் காட்டில் நேரடியாக பார்க்க முடியாத விலங்குகளை பார்ப்பதற்காக மக்கள் வனவிலங்கு சரணாலயத்திற்கு செல்வார்கள். அந்த வனவிலங்கு சரணாலயத்தில் விலங்குகள் கூண்டுக்கு உள்ளே அடைக்கப்பட்டிருக்கும். மனிதர்கள் அந்த கூண்டுக்கு வெளியே நின்று அந்த விலங்குகளை வேடிக்கை பார்ப்பார்கள்.

இதுதான் பொதுவாக எல்லா வனவிலங்கு சரணாலயங்களிலும் நாம் பார்க்கும் ஒரு விஷயம். ஆனால் சீனாவில் உள்ள ஒரு வனவிலங்கு சரணாலயத்தில் இதற்கு நேர்மறையான ஒரு சம்பவம் நடக்கிறது. சீனாவில் reverse zoo என்ற ஒரு வனவிலங்கு சரணாலயம் உள்ளது.

இந்த வனவிலங்கு சரணாலயத்தில் மனிதர்களை ஒரு கூண்டுக்குள் போட்டு அடைத்து விடுவார்கள். கூண்டுக்குள் இருக்கும் மனிதர்களை வேடிக்கை பார்ப்பதற்காக சிங்கம், புலி போன்ற விலங்குகள் வெட்ட வெளியில் நடமாடும். விலங்குகள் இந்த கூண்டுக்குள் இருக்கும் மனிதர்களிடம் வந்து மனிதர்களை பார்த்துவிட்டு அவர்களை தாக்க முயற்சி செய்யுமாம். அந்த கூண்டுகள் அடிக்கடி பரிசோதனை செய்யப்பட்டு நல்ல நிலையில் இருக்கிறதா, விலங்குகளால் மனிதர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் கூண்டு உள்ளதா என்று என்ஜினீயர்கள் அடிக்கடி சோதனை நடத்துவார்கள்.
