சமீபத்தில் மதுரையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஒருவரின் சாதனை குறித்து சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. விக்டர் என்பவர் ஆசிரியராக தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை உழைத்த பிறகு, இப்போது காது முடியின் மூலம் தனது நண்பர்கள் மற்றும் அண்டை வீட்டாரின் பாராட்டுக்களால் பரவசமடைந்தார்.
2,000 க்கும் மேற்பட்டவர்கள் இன்ஸ்டாகிராமில் விக்டரின் சாதனையை "நானும் மதுரைக்காரன் தாண்டா" என்ற ஹேஷ்டேக் போட்டு பெருமையுடன் பதிவு செய்தனர். விக்டர் தனது காதுகளுக்கு வெளியே வளரும் மிக நீளமான முடிக்காக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றார். காதுக்கு வெளியே சுமார் 18.1 செ.மீ நீளத்துக்கு வளர்ந்துள்ளது. அவரது விடாமுயற்சியை எல்லோரும் பாராட்டி வருகின்றனர். ஒரு சிலர் அவரைப்போலவே காது முடியை நீளமாக வளர்த்தாலும், விக்டரின் முயற்சியை முறியடிக்க முடியவில்லை.
2007 முதல் தோற்கடிக்க முடியாதவராக இருக்கிறார் விக்டர். விக்டர் ஒரு அதிர்ஷ்டசாலி. ஆண்களின் முடி வளர்ச்சிக்கு டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் காரணமாகும். அவரது காது முடி மிகவும் தடிமனாக இருப்பதால், அது காது மெழுகு, வெளிப்புற தூசி மற்றும் அழுக்கு பொருட்களிலிருந்து பாதுகாக்கிறது.