பொதுவாக உடலில் அக்குள் பகுதிகளில், மார்பகங்கள் அடியிலும், தொடை இடுக்குகளில், பிறப்புறுப்பு பகுதிகளில், கழுத்தை சுற்றி, முகத்தில் வாய் சுற்றி உள்ள பகுதியில், கன்னங்கள் மேலே பக்கவாட்டில் கருமை நிறம் பரவலாக காணப்படும். ஆண், பெண் வித்தியாசம் இல்லாமல், இந்த பகுதிகளில் கருமை நிறம் படர்ந்து கொண்டே செல்லும். கழுத்தில் செயின் போட்டதால் தான் கருப்பு ஆச்சுன்னு சிலபேர் கண்டுக்காம இருப்பாங்க. படர ஆரம்பிக்கும் போதே மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொண்டால், பல சிக்கல்களை தடுக்க முடியும்.
இதற்கு இன்சுலின் சுரப்பையும் ஒரு காரணமா சொல்றாங்க. தினமும் குறைந்தது ஒரு மணிநேரமாவது கடுமையான உடற்பயிற்சி செய்வதன் மூலம் இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் அல்லது நீரழிவு நோயை நார்மலாக வைக்க முடியும். உட்கொள்ளும் கலோரிகளை குறைத்துக் கொண்டு, எடையை கட்டுக்குக்குள் வைத்துக்கொண்டால் நல்ல மாற்றம் தெரியும். பெரும்பாலும் பெண்கள் இதை கவரிங் நகை அணிந்ததால் ஏற்பட்ட அழற்சி என்று கூறுவார்கள். இதை பற்றிய விழிப்புணர்வு நம்ம ஊரில் அவ்வளவாக இல்லை.
கழுத்தின் சுற்றளவு பெரிதாகி, நாக்கின் கீழ் கொழுப்பு கூடும் போது, Obstructive Sleep Apnea(OSA) என்று சொல்லப்படும் தூக்கக் குறைபாடு ஏற்படும். உறங்கும் போது நாக்கு பின்சென்று சுவாசக்குழாயை அடைத்து அடிக்கடி விழித்தெழும் நிலை உண்டாகும். இது ரத்தக்கொதிப்பை அதிகப்படுத்தும். இதுவே பின்னாளில் மற்ற நோய்களுக்கு முன்னோடியாக அமைகிறது. இதை பற்றிய விழிப்புணர்வும் நம் மக்களுக்கு அவ்வளவாக இல்லை. இதெல்லாம் பெரும்பிரச்சினையின் ஆரம்ப அறிகுறி என்று பின்னர் தான் தெரியும்.
அதற்குன்னு எல்லா வயதினரும் இதனைக்கண்டு பயப்பட தேவையில்லை. 19 வயது அத்தை மகனுக்கு 4 வருடமாக கழுத்து பகுதி கருமையாக உள்ளது. தைராய்டு டெஸ்ட் எடுக்க சொன்னார்கள். ஆனால் டெஸ்ட் எல்லாம் நார்மலாக உள்ளதாக வந்தது. பிறகு தோல் மருத்துவரை அணுகி, சில மருந்துகள் போட ஆரம்பித்ததும் கருமை நிறம் மறைந்துவிட்டது. லேசா பரவ ஆரம்பிக்கும் போதே ஒரு டெஸ்ட் எடுத்து என்னான்னு உறுதிபடுத்திக்கொண்டால், பிற்காலத்தில் சிரமப்படத்தேவையில்லை.