நடிகை ரேணுகா மேனன் எல்லோருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பெரும்பாலும் 90ஸ் கிட்ஸ்களுக்கு தெரிந்திருக்கும். கடைசியாக 2006 ஆம் ஆண்டு நடித்ததோடு சரி. உங்களுக்கு ஒரு கும்பிடு; உங்க சினிமாவுக்கு ஒரு குடும்பிடு என சொல்லி டாட்டா காட்டிட்டு போயிட்டார். தமிழில் பிப்ரவரி 14, கலாப காதலன் படத்தில் நடித்துள்ளார்.
கலாப காதலன் படத்தில் ஆர்யாவுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார். அதற்கு பிறகு தமிழ் சினிமா பக்கமே தலைகாட்டவில்லை.தமிழில் இவரது படங்கள் பாக்ஸ் ஆபிஸில் சிறப்பாக செயல்படவில்லை என்றாலும், மேனனின் நடிப்பு பாராட்டப்பட்டது. 2006 நவம்பர் 21ல் அமெரிக்க மென்பொருள் பொறியாளரை ரேணுகா திருமணம் செய்து கொண்டார்.
தம்பதியருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். திருமணத்திற்குப் பிறகு, அவர் தனது நடிப்பு வாழ்க்கையில் இருந்து ஓய்வு எடுக்க முடிவு செய்தார். இப்போது கலிபோர்னியாவில் வசிக்கிறார் மற்றும் நடனப் பள்ளியை நடத்தி வருகிறார். அவரது நடனப் பள்ளி இளம் ஆர்வமுள்ள நடனக் கலைஞர்களுக்கு தங்கள் திறமையைக் கற்றுக் கொள்ளவும் வெளிப்படுத்தவும் ஒரு சிறந்த தளமாக உள்ளது.
ரேணுகா சமையல், ஒப்பனை, நடனம் போன்றவற்றில் ஆர்வமாக உள்ளார். "பிரணவம் நடனப் பள்ளி" என்ற நடனப் பள்ளி அமெரிக்காவில் பிரபலமானது.