கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திரௌபதி படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. என்னதான் இந்த படத்தை படி நிறைய பேர் தப்பா பேசினாலும் வசூலில் படம் பட்டைய கிளப்பியது. மோகன் என்னும் புதுமுக இயக்குனர் இயக்கத்தில் திரௌபதி படம் வெளியானது. இந்த மோகன் தற்போது ருத்ர தாண்டவம் என்னும் படத்தை எடுத்து வருகிறார். இன்னும் சில தினங்களில் ருத்ரதாண்டவம் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த படத்தின் இசை வெளியீட்டுவிழா அண்மையில் நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவில் தமிழ் சினிமாவின் புகழ் பெற்ற வில்லன் ராதாரவி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். மைக் கிடைச்சா போதும், நம்ம ஆளு எல்லாரையும் கழுவி ஊத்தி விடுவார். அதுதான் அவருடைய குணம்.
தமிழ் சினிமா இப்போ செ*த்துப் போச்சு, நடிப்பு திறமைக்கு இங்க கொஞ்சம் கூட மரியாதை இல்லை. முன்னணி நடிகர்கள் அவங்க வச்சது தான் சட்டம் என்கிற மனநிலையில் நடித்து வருகிறார்கள். முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களில் கார்ப்பரேட் கம்பெனிகளை எதிர்த்து தங்கள் படங்களில் வசனம் பேசுறாங்க, ஆனால் படம் ரிலீஸ் ஆனவுடன் அதே கார்ப்பரேட் கம்பெனிடம் தான் அந்த படத்தை விக்கிறாங்க, அப்புறம் எதுக்கு இப்படி தேவை இல்லாம வசனம் பேசணும் என்று காரசாரமாக பேட்டி கொடுத்துள்ளார்.
இப்போ தமிழில் நடிக்கும் பாதி நடிகர்கள் எல்லா படங்களிலும் கார்ப்பரேட் கம்பெனிகளை எதிர்த்து தான் வசனம் பேசுறாங்க. அதுவும் முன்னணியில் இருக்கும் அஜித், விஜய், ரஜினி, விஜய் சேதுபதி போன்றோர் எப்பவுமே கார்ப்பரேட் கம்பெனி பத்தி தான் பேசுறாங்க. இப்படி இருக்கும் சூழ்நிலையில் இவர் முன்னணி நடிகர்களை நேரடியாக விமர்சனம் செய்திருப்பது அனைவரையும் அ*திர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.