இந்திய மக்கள் எல்லாருக்கும் தெரிந்த இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்கள் என்றால் அது அம்பானி மற்றும் ரத்தன் டாட்டா மட்டுமே. அம்பானி என்னதான் மிகப்பெரிய பணக்காரராக இருந்தாலும் மக்களின் மனதில் இடம்பிடித்த கோடீஸ்வரர் என்றால் அது நம்ம ரத்தன் டாட்டா தான். இவர் என்னதான் மிகப்பிரிய பணக்காரராக இருந்தாலும் ஏழை மக்களுக்கு உதவுவது என்றால் முதல் ஆளாக வந்து நிற்பார்.
83 வயதாகும் ரத்தன் டாட்டா இதுவரை தன் வாழ்வில் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். இதற்கு என்ன காரணம் என்று அண்மையில் பத்திரிக்கையாளர்கள் இவரிடம் கேட்டனர். நான் இதுவரை நான்கு பெண்களை காதலித்தேன், அந்த நான்கு காதலும் சில காரணங்களால் கை கூடாமல் போனது. இதனால் தான் நான் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறேன் என்று சொன்னார். அதுவும் தன்னுடைய முதல் காதல் கதை பற்றி சுவாரஸ்யமான தகவல்களை வெளியிட்டுள்ளார்.
இந்திய சீன போர் தான் இவர்களின் காதலுக்கு தடையாக இருந்துள்ளது. அமெரிக்காவில் படித்த ரத்தன் டாட்டா அங்கே ஐ.பி.எம். நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அப்போது தன்னுடன் பழகிய ஒரு அமெரிக்க பெண்ணை காதலித்து வந்துள்ளார். தன்னை வளர்த்த தன்னுடைய பாட்டிக்கு உடம்பு சரி இல்லாமல் போக அவரை பார்க்க இந்தியா வந்துள்ளார்.
அந்த நேரத்தில் சீனா இந்தியாவிற்கு இடையே போர் ஏற்பட்டுள்ளது. அது ரொம்ப சாதாரண பிரச்சனைதான். ஆனால் இந்த பிரச்சனையை அமெரிக்காவில் பூதாகர பிரச்சனை போல பெருசா பேச ஆரம்பித்தனர். இதனால் அமெரிக்காவில் இருந்த இவருடைய காதலி இவரை விட்டு பிரியும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பின்னர் வேறொரு நபரை அந்த பெண்மணி திருமணம் செய்து கொண்டார். இதே போல இவருடைய வாழ்க்கையில் நான்கு பெண்களை காதலித்துள்ளார். ஆனால் இந்த நான்கு காதலும் சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் கைகூடாமல் போனது. அதனால் தான் இன்றுவரை ரத்தன் டாட்டா திருமணம் செய்யாமல் இருக்கிறார்.