notification 20
Daily News
ஜெயிலர் படத்துக்காக ரஜினிகாந்த் செய்த தரமான சம்பவம்! இந்த வயசுலயும் மனுஷன் இவ்வளவு எனர்ஜியா இருக்கிறாரே? படக்குழு பெருமிதம்!

rajinikanth-upcoming-jailor-movie-update

அன்றும் இன்றும் என்றும் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வளம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். அண்மையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெறவில்லை. எனவே தன்னுடைய அடுத்த படம் மிகப்பெரிய ஹிட்டாக அமைய வேண்டும் என்று மும்மரமாக படப்பிடிப்பில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.

rajinikanth-upcoming-jailor-movie-update

தற்போது நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் என்னும் படத்தில் நடித்து வருகிறார். ரஜினிகாந்த்தின் அறிவுரைப்படி பல மொழி முன்னணி நடிகர்களை இந்த ஜெயிலர் படத்தில் இணைத்து பான் இந்தியா படமாக நெல்சன் உருவாக்கி வருகிறார். ரஜினிகாந்துக்கு தற்போது 70 வயதுக்கு மேல் ஆகிறது.

rajinikanth-upcoming-jailor-movie-update

பெங்களூரு, கர்நாடகா, கேரளா, ராஜஸ்தான், கடலூர், சென்னை, நேபால் என கடந்த ஒரு மாதத்தில் படக்குழு நிறைய இடங்களுக்கு சென்று படப்பிடிப்பு நடத்தி வருகிறது. உங்களுக்கு ரொம்ப வயசாகிருச்சு, இவ்வளவு இடத்துக்கு உங்களால அலைய முடியாது, உங்க காட்சிகளை மட்டும் கிரீன் மேட்டில் எடுத்துக்கலாம் என்று நெல்சன் ரஜினிகாந்தை வற்புறுத்தியுள்ளார். அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல, எல்லா இடத்துக்கும் நானும் வறேன் என்று சொல்லி இருக்கிறார். இந்த வயசுலயும் தலைவர் இவ்வளவு எனர்ஜியா நடிக்குறாரே என்று படக்குழு சந்தோசத்தில் உள்ளனர்.

Share This Story

Written by

Karthick View All Posts