Daily News

பேரு வெக்க ஆளில்ல! குத்து மதிப்பா சீட்டு கிழிச்சு குடுக்கும் ஆபிசர்! புளியமரத்தை அடையாளமாய் வெச்சு பொழப்பு நடத்தும் கூட்டம்!

Aug 05 2022 06:39:00 AM

நம்ம நாடு எவ்வளவு பெரியதென்பதை நாடு முழுக்க சுற்றுலா செய்தவர்கள் யாரிடமாவது கேட்டுப்பார்த்தால் தான் தெரிந்துகொள்ள முடியும். பரந்து விரிந்து கிடக்கும் நம்ம நாட்டில் நமக்கு தெரியாத லட்சக்கணக்கான விஷயங்கள் உள்ளன. அதில் ஒரு சுவாரசியமான விஷயத்தை பற்றித்தான் இன்று நாம் பார்க்கப்போகிறோம்.

rainagar railway station west bengal india

ரயில் பயணம் செய்வது எனக்கு மிகவும் பிடித்த விஷயங்களுள் ஒன்று. நீண்ட தூர பயணங்களுக்கு ரயில் மட்டுமே என்னுடைய விருப்பமான தேர்வாக இருக்கும். ரயில் ஜன்னலோரத்தில் அமர்ந்து கொண்டு இயற்கை அழகை ரசித்தபடி பயணம் செய்வது நம் மனதுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தரும். சமீபத்தில் நான் மேற்கொண்ட பயணத்தின்போது ஒரு வித்தியாசமான ரயில் நிலையத்தை பார்த்தேன். அந்த ரயில் நிலையத்தை என்னவென்று அழைப்பதன்றே தெரியவில்லை.

rainagar railway station west bengal india

பெயர் பலகையில் ஹிந்தி, பெங்காலி, ஆங்கிலம் என ஏதாவது ஒரு மொழியில் நான்கு எழுத்துக்களை எழுதியிருந்தால் தானே அந்த ஊர் பெயர் என்னவென்பதை தெரிந்துகொள்ள முடியும். நான் கூறும் ரயில் நிலையத்துக்கு பெயரே கிடையாது. பெயர் பலகை மஞ்சள் நிறத்தில் கம்பீரமாக காட்சியளிக்கிறது. ஆனால் அதில் எந்த பெயரும் எழுதப்படவில்லை. இருப்பினும் அந்த ஊர் வந்தவுடன் அங்கு கச்சிதமாக ரயில் நிற்கிறது. மக்களும் கூட்டம் கூட்டமாக ரயிலில் ஏறுவதும், இறங்குவதும் சர்வ சாதாரணமாக நடந்துகொண்டு இருக்கிறது.

rainagar railway station west bengal india

பெயர் பலகையே இல்லாமல் இந்த ஊர் மக்கள் எப்படி பயணம் செய்கின்றனர் என்பது இன்னமும் எனக்கு குழப்பமாகவே இருக்கிறது. ராய்நகர் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ரயில் நிலையம் மேற்கு வங்கத்தில் அமைந்துள்ளது. கடந்த 2008ம் ஆண்டு முதல் இந்த ரயில் நிலையம் இயங்கி வருகிறது. ராய்நகர் என்ற பெயர் எங்களுக்கு பிடிக்கவில்லை எனவே வேறு பெயரை மாற்றி வையுங்கள் என அவ்வூர் மக்கள் ரயில்வே துறைக்கு கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையை ஏற்று அதிகாரிகளும் பெயர் பலகையில் இருந்த பெயரை நீக்கியுள்ளனர்.

rainagar railway station west bengal india

ஏற்கனவே இருந்த பெயரை நீக்கியிருந்தாலும் புதிதாக எந்தப்பெயரும் வைக்காமல் வெறும் பெயர் பலகையோடு இயங்கி வருகிறது அந்த ரயில் நிலையம். மேற்கு வங்கத்திற்கு சுற்றுலா சென்றிந்த போது இந்த பெயரில்லாத ரயில்வே நிலையத்தை கடந்து செல்லும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போது தான் நம்ம நாட்டில் இப்படி ஒரு ரயில் நிலையம் இயங்கி வருவதை பற்றி தெரிந்துகொண்டேன். பெயரில்லாத ரயில்வே ஸ்டேஷன் விரைவில் ஒரு சுற்றுலாத்தலமாக மாறினால் கூட ஆச்சர்யப்படுவதற்கில்லை. பெயரே தெரியாமல் எப்படி அந்த ஊருக்கு சுற்றுலா செல்வது என்பது தான் நாம் யோசிக்க வேண்டிய முக்கியமான மேட்டர்.