radha-ravi-reveals-vijay-secret
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான வாரிசு படம் 300 கோடிக்கும் மேல் வசூலித்தது. தற்போது நடிகர் விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்னும் படத்தில் நடித்து வருகிறார். லியோ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

radha-ravi-reveals-vijay-secret
கடந்த சில வருடங்களாகவே நடிகர் விஜய் விக் வச்சு தான் நடிக்கிறார், அவருக்கு இருப்பது ஒரிஜினல் முடி இல்ல என்று சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். விஜய் தரப்பில் இருந்து இதுவரை எந்தவிதமான விளக்கமும் அளிக்கப்படவில்லை. படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் வெளியாகும் விஜய்யின் போட்டோக்களும் அதை உறுதிபடுத்தும் வகையில் அமைந்துள்ளன.

radha-ravi-reveals-vijay-secret
இந்நிலையில் நடிகர் விஜய் சர்க்கார் படத்தில் விக் வைத்து தான் நடித்தார் என்கிற தகவலை நடிகர் ராதாரவி வெளியிட்டுள்ளார். படப்பிடிப்பு நேரத்தில் விஜய்க்கு மட்டும் 25000 ரூபாய் மதிப்பிலான காஸ்ட்லியான விக் குடுத்தாங்க, எனக்கு மட்டும் மட்டமான விலை குறைவான விக் குடுத்து நடிக்க சொன்னாங்க. எனக்கு கோவம் வந்துருச்சு, தயாரிப்பாளர் கிட்ட சண்டைக்கு போயிட்டேன் என பேட்டி கொடுத்துள்ளார் ராதாரவி. விஜய்யின் விக் பற்றி ராதாரவி சொன்ன விஷயம் தமிழ் சினிமா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
