தமிழ் சினிமாவில் திரில்லர் படம் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்கிற வரைமுறையை உருவாக்கிய படம் என்றால் அது ராட்சசன் படம் தான். இனி இந்த மாதிரி ஒரு திரில்லர் படம் தமிழ் சினிமாவில் வருமா என்பது சந்தேகம் தான். இந்த படத்தை ராம்குமார் இயக்கி இருந்தார். விஷ்ணு விஷால், அமலா பால் மற்றும் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்த கிறிஸ்டோபர் என எல்லோரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்கள்.
இந்த கதையை கிட்டத்தட்ட எட்டு நடிகர்களிடம் இயக்குனர் ராம் குமார் சொல்லியுள்ளார். விஜய்சேதுபதி, விஜய் ஆன்டனி, ஜெயசூர்யா, இந்திரஜித் சுகுமார் போன்றோரிடம் வயதான போலீஸ் கதாப்பாத்திரம் கொண்ட நடிகர் என்று கதை சொல்லியுள்ளார். இவங்க எல்லாருக்கும் படத்தின் கதையும், திரைக்கதையும் பிடிக்கவில்லை என்று சொல்லி ரிஜெக்ட் செய்துள்ளனர்.
பின்னர் மீண்டும் இளமையான நடிகர் கதாப்பாத்திரத்துடன் சிபிராஜ், சாந்தனு பாக்யராஜ், ஜெய் மற்றும் விஷ்ணு விஷாலிடம் கதை சொல்லியுள்ளார். ஜெய்க்கு 90 சதவீதம் கதை பிடித்துள்ளது. இருந்தும் சில காரணங்களால் இந்த படத்தில் நடிக்க முடியாது என்று சொல்லிவிட்டார். அவ்வளவு ஏன் நம்ம விஷ்ணு விஷாலே முதலில் இந்த கதையில் நடிக்க சம்மதிக்கவில்லை. பின்னர் தான் நானே நடிக்கிறேன் என்று சொல்லி இந்த படத்தில் நடித்து கொடுத்துள்ளார்.
கிட்டத்தட்ட 5, 6 தயாரிப்பாளர்கள் இந்தப் படத்தின் திரைக்கதை பிடிக்கவில்லை என்று சொல்லி ரிஜெக்ட் செய்துள்ளனர். இப்போ இந்த படம் தான் சிறந்த கதை, திரைக்கதை மற்றும் திரில்லர் லிஸ்டில் முதல் இடத்தில் உள்ளது. நல்ல வேலை விஷ்ணு விஷால் நடிக்க வேண்டிய கதாப்பாத்திரத்தில் வேறு யாராச்சும் நடித்திருந்தால் பிரியாணியில் சாம்பார் ஊத்துன மாதிரி மொக்கையாக இருந்திருக்கும்.