ஒரு போராளியாக மட்டுமே பிடரல் காஸ்ட்ரோவை பற்றி நமக்கு தெரியும். ஆனால் அந்த பிடரல் காஸ்ட்ரோவின் போராட்டத்தின் விளைவாக அந்த நாட்டிற்கு கிடைத்த நன்மைகள் என்னென்ன தெரியுமா. தனியார் மருத்துவமனைகளே இல்லாத ஒரு நாடு தான் கியூபா.

கியூபா நாட்டில் தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகள் இருக்காது. அரசாங்கத்தின் பள்ளி, கல்லூரிகள் மட்டுமே அங்கு செயல்படும். கியூபா நாட்டில் வீடே இல்லாதவர்கள் என்று யாரும் இருக்க மாட்டார்கள். எல்லா மக்களுக்கும் வீடு இருக்கும். சொத்து வரி கிடையாது. வீட்டை அடமானம் வைத்து வாங்கும் கடனுக்கு வட்டி கிடையாது.

6 முதல் 15 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கட்டாயக்கல்வி வழங்க வேண்டும் என்னும் சட்டம் கியூபாவில் நடைமுறையில் உள்ளது. கியூபாவில் தொழில் நுட்ப பிரிவில் வேலைபார்ப்பவர்களில் 70 சதவீதம் பேர் பெண்கள் தான். நாடு முழுவதும் பள்ளி பயிலும் மாணவர்களுக்கு ஒரே நிறத்தில் சீருடை.

12 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் போன்ற பல நல்ல திட்டங்கள் கியூபாவில் நடைமுறையில் உள்ளது. கியூபாவில் தற்போது நடைமுறையில் உள்ள இந்த சட்டங்களுக்கு வித்திட்டது பிடரல் காஸ்ட்ரோவின் போராட்டங்கள் தான். இவரின் ஆட்சி காலத்தில் தான் இந்த சட்டங்களை பிடரல் காஸ்ட்ரோ கியூபா நாட்டில் நடைமுறைப்படுத்தினார்.
