notification 20
Lushgreen
இது என்னங்க புதுசா இருக்கு! நடிகர்கள் வாங்கும் சம்பளத்துக்கு தயாரிப்பாளர்கள் ஏன் கப்பம் கட்டுகிறார்கள்? கூடிய சீக்கிரம் இந்த கொ டுமைக்கு விடிவு காலம் பிறக்கப் போகுதுன்னு தோணுது!

நாம் கடைகளில் வாங்கும் பொருளுக்கு எவ்வளவு GST வரி வருகிறதோ அதை நாம் தான் கட்டியாக வேண்டும். இதில் மாற்றுக்கருத்து ஏதும் இல்லை. நாம் உபயோகப்படுத்தப் போகும் பொருளை நாம் வாங்குவதால் அதற்கான வரியையும் நாமே கட்டவேண்டும் என்பது இயற்கை. ஆனால் நம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் வாங்கும் சம்பளத்துக்கு GST வரியை தயாரிப்பாளர்கள் தான் கட்டணுமாம்.

சம்பளமும் தயாரிப்பாளரிடமிருந்து பெற்றுக்கொண்டு அதற்கான GST வரியையும் தயாரிப்பாளர்களையே நம்ம முன்னணி நடிகர்கள் கட்ட சொல்கிறார்களாம். இதையும் பெரிய மனதுடன் ஏற்றுக் கொண்டு தயாரிப்பாளர்கள் கட்டுகிறார்கள். கோடிகளில் சம்பளத்தையும் கொடுத்து அதற்கான GST வரியையும் கட்ட வேண்டும் என்று தயாரிப்பாளர்களுக்கு அப்படி என்ன தலையெழுத்து?

எல்லாம் காரணம் இருக்கு பாஸ். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் என்று சொல்லும்படி வெறும் 5, 6 நடிகர்கள் மட்டுமே உள்ளனர். ஆனால் தயாரிப்பாளர்களோ நூற்றுக்கும் அதிகமான பேர் இருக்கின்றனர். முன்னணி நடிகர்களின் படங்களை எடுத்தால் தான் பெரிய அளவில் கல்லா கட்ட முடியும். அதற்காகத்தான் என்ன ஆனாலும் பரவாயில்லை, சம்பளம் GST ரெண்டையும் நாமே கட்டிவிடுவோம் என்று தயாரிப்பாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு முன்னணி நடிகர்களிடம் கால் சீட் கேட்டு சுற்றுகிறார்கள்.

இந்த நடிகர்களின் சம்பளம் மற்றும் GST விஷயத்துக்கு ஒரு பெரிய ஆப்பு வந்துவிட்டது. கொ ரோனா பரவல் ஆரம்பித்ததில் இருந்தே நிறைய படங்கள் எடுக்கவும் இல்லை, திரையங்குகளிலும் படங்கள் திரையிடப் படுவதில்லை. இதே நிலை தொடர்ந்தால் நிறைய தயாரிப்பாளர்கள் தங்கள் தொழிலை விட்டுவிட்டு வேறு தொழில் பார்க்க தொடங்கிவிடுவார்கள்.

அப்போது எத்தனை முன்னணி நடிகர்கள் இருப்பார்களோ அதே அளவுக்குத்தான் தயாரிப்பாளர்களும் இருப்பார்கள். அந்த நேரத்தில் தயாரிப்பாளர்களின் பேச்சை கேட்பதைத் தவிர முன்னணி நடிகர்களுக்கு வேறு வழி இல்லை என்று சினிமா வட்டாரங்களில் பேசிக்கொள்கிறார்கள்.

Share This Story

Written by

Karthick View All Posts