Lushgreen

மலர் டீச்சர் பற்றி இதுவரை உங்களுக்கு தெரியாத ஒரு விஷயம் என்னவென்று தெரியுமா? பல ஆண்டுகள் கழித்து உண்மையை போட்டுடைத்த இயக்குனர்!

Jun 13 2021 10:26:00 AM

2015ம் ஆண்டு வெளியான மலையாள திரைப்படமான பிரேமம் மிகப்பெரிய வெற்றி பெற்று அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது. மலையாளப்படம் என்றாலும் தமிழ்நாட்டிலும் இந்தப்படம் சக்கை போடு போட்டது. இதற்கு காரணம் இந்தப்படத்தில் நடித்த சாய் பல்லவி தமிழ்நாட்டை சேர்ந்தவர். அல்போன்ஸ் புத்ரனின் இயக்கத்தில் வெளியான இந்தப்படத்தில் நிவின் பாலி நாயகனாக நடித்திருந்தார். இவருடன் சாய் பல்லவி, மடோனா செபாஸ்டின், அனுபமா உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்திருந்தனர்.

premam-malar-teacher asin sai-pallavi nivin-pauly alfonse-puthran

3 ஹீரோயின்கள் நடித்திருந்தாலும் சாய் பல்லவி நடித்த மலர் டீச்சர் கதாபாத்திரம் தான் இந்தப்படத்தில் அனைவரையும் ரசிக்க வைத்தது. அந்த கதாபாத்திரம் தான் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்று கூட கூறலாம். இந்தப்படம் தான் சாய் பல்லவிக்கு முதல் படம். முதல் படத்திலேயே முத்திரை பதிக்கும் கதாபாத்திரத்தில் நடித்து ஏகோபித்த வரவேற்பை பெற்றார் அவர். இந்தப்படம் சேரனின் ஆட்டோகிராப் படத்தின் சாயலில் இருந்ததாகவும் ஒரு சிலர் கூறியிருந்தனர்.

premam-malar-teacher asin sai-pallavi nivin-pauly alfonse-puthran

இந்த நிலையில் 6 ஆண்டுகள் கழித்து மலர் டீச்சர் கதாபாத்திரம் குறித்து ஒரு ரகசியத்தை படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். முதலில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நடிகை அசின் தான் பொருத்தமாக இருப்பார் என்று முடிவு செய்தார்களாம். ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியாத காரணத்தினால் அவருக்கு பதிலாக சாய் பல்லவியை அறிமுக நடிகையாக நடிக்க வைத்தார்களாம்.

premam-malar-teacher asin sai-pallavi nivin-pauly alfonse-puthran

படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் மட்டுமல்லாது நாயகன் நிவின் பாலியும் அசின் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று விரும்பியுள்ளார். ஆனால் அவரிடம் இதுகுறித்து தொடர்புகொண்டு பேச முடியாமல் போகவே அதை அப்படியே விட்டுவிட்டனர். மலர் டீச்சர் கதாபாத்திரம் குறித்த இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.