"ஒரே வருடத்தில் டைவர்ஸ் வாங்கினார். அந்தக்காலத்தில் இந்த விவகாரம் பெரிய பஞ்சாயத்தா போச்சு..."
| மறைந்துவிட்டார் என்ற செய்தியை கேட்டதும், யாரோ பிரபலமாகாத ஒரு பழைய நடிகர் என்று நினைத்தேன். பிறகு, போட்டோ தேடி பார்த்தபோது, இவரா அதுன்னு ஒரு ஆச்சர்யம். இவ்வளோ நாள் இவருடைய பெயர் தமிழ் மக்களுக்கு சரியா தெரியாது. ஆனால், போட்டோ காட்டிய உடனே, கண்டுபிடிச்சிருவாங்க. மலையாள நடிகராக இருந்தாலும், முகத்தை பார்த்த உடனே, இவர் நடித்த காட்சிகளை சொல்லும் அளவுக்கு தமிழ் சினிமாவில் பிரபலமானவர். பிரதாப் போத்தன்Pratap Pothen
பள்ளி, கல்லூரியில் படிக்கும் போது நாடகங்களில் நடித்த பிரதாப் போத்தன், அவரது நண்பர் ஹரி மூலம் தயாரிப்பாளர் பரதனுக்கு அறிமுகமானார். அதன் மூலம் பரதன் இயக்கிய மலையாளப் படத்தில் நடிகராக அறிமுகமானார் பிரதாப் போத்தன். 1980களின் தொடக்கத்தில் டாப் லெவலில் இருந்தார். இடையில் 1985ல் நடிகை ராதிகாவை திருமணம் செய்துகொண்டு, ஒரே வருடத்தில் டைவர்ஸ் வாங்கினார். அந்தக்காலத்தில் இந்த விவகாரம் பெரிய பஞ்சாயத்தா போச்சு.
பிறகு ஒரு நான்கு வருடம் ரெஸ்ட். மீண்டும் 1990ல் அமலா சத்யநாத் என்பவரை திருமணம் செய்துகொண்டார். 2012 வரைக்கும் ஒற்றுமையா இருந்தாங்க. இந்த உறவிலும் 2012 ஆம் ஆண்டு விரிசல் ஏற்பட்டு மீண்டும் டைவர்ஸ். இடையில் கேயா போத்தன் என்ற பெண் குழந்தை பிறந்தது. இதுநாள் வரையிலும் அவரை, பிரதாப் போத்தன் தன் மகள் என்று வெளியில் அறிமுகம் செய்து வைத்ததில்லை. அவங்களுக்கே இப்போ 31 வயசு ஆச்சாம்.
இப்போது, பிரதாப் மறைவுக்கு பிறகு மகள் கேயாவின் புகைப்படங்கள் இண்டர்நெட்டில் வைரலாகி வருகிறது. பெங்களூரில் குடியேறிய காயா, இசையில் ஆர்வம் கொண்டவர். பல பாடல்களை எழுதி பாடியுள்ளார் என்பதுடன், ஒரு இசைக்குழுவையும் வைத்துள்ளார்.