Daily News

உங்க இஷ்டத்துக்கு நீங்க ஏத்தினா நாங்க கட்டணுமா? போராட்டம் எல்லாம் நடத்தி எந்த பயனுமில்லை! விசைத்தறி தொழிலார்கள் கொடுத்துள்ள ஷாக்!

Sep 19 2022 02:59:00 AM

தமிழகம் முழுவதும் நடைபெறும் ஜவுளித்தொழிலில் விசைத்தறி தொழிலார்களின் பங்கு மிகவும் குறிப்பிடத்தக்கது. சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் இந்த தொழிலை நம்பி இருக்கிறார்கள்.  இவர்கள் மூலமாக நாளொன்றுக்கு சுமார் 100 முதல் 150 கோடி ரூபாய் வரையில் தொழில்கள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே அரசு விதித்து இருக்கும் ஜிஎஸ்டி வரி மூலம் நாளொன்றுக்கு 7 கோடி ரூபாய் என்ற அளவில் வருமானம் அரசுக்கு கிடைக்கும் நிலையில், மாநில அரசுக்கு 3.5 கோடி ரூபாய் வருமானம் இதன் முலமாக கிடைக்கிறது

powerloom power loom labor electricity bill

கொரோனா காலகட்டத்தில் நலிவடைந்த இந்த விசைத்தறி தொழில் தற்போது மெல்ல வளர்ச்சி பாதையை நோக்கி நகர தொடங்கி இருக்கிறது. இதனால் சற்று மனநிம்மதியில் இருந்த தொழிலாளர்கள் தற்போது தமிழக அரசு உயர்த்தி அறிவித்து இருக்கும் மின்சார கட்டங்களை கேட்டு மிகவும் ஆடிப்போய் இருக்கிறார்கள். காரணம் இந்த உயர்த்தப்பட்ட கட்டணம் காரணமாக உற்பத்தி பொருட்களின் ஆதார விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே நூல் விலை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் தொழிலார்களின் கூலியும் உயர்தியாக வேண்டும் என்ற நிலையில் உரிமையாளர்கள் கவலையில் உள்ளனர்.

powerloom power loom labor electricity bill

இந்நிலையில் அரசு உயர்த்தி அறிவித்து இருக்கும் மின்சார கட்டணத்தை திரும்ப பெரும் வரையில் வேலை நிறுத்த புறத்தில் ஈடுபட போவதாக விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம் ஏற்கனவே அறிவித்து இருந்த நிலையில், அரசு இந்த கட்டணத்தை திரும்ப பெரும் வரையில் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை கட்ட முடியாது என்ற அதிரடி அறிவிப்பையும் கூறி இருக்கிறார்கள். மேலும் மின்துறை அமைச்சரை சந்தித்து இதுகுறித்து கோரிக்கை வைக்கப்போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது